தனுஷ் இதுவரை நடிக்காத கேரக்டர்.. ஆனந்த் எல்.ராய் படத்தின் மாஸ் தகவல்..!

  • IndiaGlitz, [Wednesday,June 21 2023]

தனுஷ் நடித்த இரண்டு பாலிவுட் திரைப்படங்கள் ’ராஜண்ணா’ மற்றும் ’அட்ராங்கி ரே’ ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் ஆனந்த் எல் ராய். இந்த நிலையில் தனுஷ் மற்றும் ஆனந்த் எல் ராய் மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணைய உள்ளனர் என்ற செய்தி ஏற்கனவே வெளியான நிலையில் இந்த படத்தின் சில தகவல்கள் தற்போது கசிந்துள்ளது.

’ராஜண்ணா’ மற்றும் ’அட்ராங்கி ரே’ ஆகிய படங்களைப் போலவே இந்த படமும் ஒரு உணர்ச்சிபூர்வமான லவ் ஸ்டோரி என்றும் ஆனால் அதே நேரத்தில் இந்த படம் விமானப்படை பின்னணியில் உருவாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. முதல் முறையாக தனுஷ் விமானப்படை வீரராக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விமானப்படையின் பின்னணியில் உருவாக இருக்கும் காதல் திரைப்படம் என்பதால் இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் அதுமட்டுமின்றி இந்த படத்தில் இதுவரை பாலிவுட் திரையுலகில் இல்லாத வகையில் அதிரடி ஆக்ஷன் காட்சியை படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் முன்னணி பாலிவுட் நடிகை ஒருவரிடம் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அனேகமாக அந்த நடிகை ஆலியா பட் ஆக இருக்கலாம் என்றும், விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் மற்றும் கூறப்பட்டாலும், இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தான் தொடங்கும் என்று தெரிகிறது.