ஐதராபாத்தில் ஒரே ஓட்டலில் தங்கினார்களா தனுஷ்-ஐஸ்வர்யா?

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவருமே தங்களுடைய பணிகளின் காரணமாக ஐதராபாத் சென்று இருக்கும் நிலையில் இருவருமே ஒரே ஓட்டலில் தங்கி இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிய நிலையில் திடீரென இருவரும் பிரிய முடிவு செய்திருப்பதாக கடந்த 17ஆம் தேதி தங்கள் சமூக வலைதளங்கள் மூலம் அறிவித்தனர். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா, ‘இது கணவன் மனைவிக்கு இடையே உள்ள பிரச்சனை தான் என்றும், மீண்டும் அவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்வோம் என்று கூறியது, ரசிகர்களுக்கு ஆறுதலாக உள்ளது.

இந்த நிலையில் ’3’ மற்றும் ’வை ராஜா வை’ ஆகிய படங்களை இயக்கிய ஐஸ்வர்யா அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்குவதற்கான பணிகளுக்காக ஐதராபாத் சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது. அதேபோல் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் ‘வாத்தி’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் தனுஷ் ஹைதராபாத்தில் தான் படப்பிடிப்பில் உள்ளார்.

மேலும் தனுஷ், ஐஸ்வர்யா இருவருமே ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தான் தங்கள் பணிகளை செய்துவரும் நிலையில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள ஹோட்டலில்தான் இருவரும் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்தார்களா? என்ற தகவல் இல்லை. இருப்பினும் ஒரே ஓட்டலில் தங்கி, ஒரே ஸ்டூடியோவில் இருவரும் பணி செய்து கொண்டிருப்பதால் இருவரும் மீண்டும் சந்தித்து தங்களுடைய கருத்து வேறுபாடுகளை மறந்து இணைய வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.