ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படங்கள்.. ஏதாவது ஒன்று பின் வாங்குமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தீபாவளி விருந்தாக ’ஜப்பான்’ ’ஜிகர்தண்டா 2’ உள்பட சில படங்கள் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் அடுத்த கட்டமாக பொங்கல் விருந்தாக சில படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பதை பார்த்தோம்.
குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’லால் சலாம்’ தனுஷ் நடித்த ’கேப்டன் மில்லர்’ சிவகார்த்திகேயன் நடித்த ’அயலான்’ மற்றும் சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’அரண்மனை 4’ படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்த ’லால் சலாம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போகலாம் என்று சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. எனவே ’கேப்டன் மில்லர்’ ’அயலான்’ ’அரண்மனை 4’ ஆகிய நான்கு படங்கள் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் சற்றுமுன் ’லால் சலாம்’’ திரைப்படம் பொங்கல் திருநாளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ’லால் சலாம்’ படமும் பொங்கல் ரேசில் இணைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது
முதல் முறையாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரது படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நான்கு படங்களும் திட்டமிட்டபடி பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகுமா? அல்லது ஏதாவது ஒரு படங்கள் பின்வாங்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Adding a spark ✨ to your Diwali celebration 🪔 with an exciting announcement!💥
— Lyca Productions (@LycaProductions) November 10, 2023
Get ready for a 1min 34secs preface of #LalSalaam 🫡 releasing this Sunday, Nov 12 at 10:45AM ⏳
In Cinemas 📽️ PONGAL 2024 Worldwide ☀️🌾 Releasing in Tamil, Telugu, Hindi, Malayalam & Kannada!… pic.twitter.com/0Y0dfi0bHG
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments