ரஜினியின் அடுத்த படத்தில் தனுஷ், ஐஸ்வர்யா? இயக்குனரின் மெகா திட்டம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை கொண்டுவர இயக்குனர் மிகப்பெரிய திட்டம் தீட்டி உள்ளதாக கூறப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த "வேட்டையன்" திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் "கூலி" என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் உருவாக இருக்கும் "ஜெயிலர் 2" படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், "ஜெயிலர்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த நடிகர்களுக்கு "ஜெயிலர் 2’ கூடுதல் வாய்ப்பு தர நெல்சன் திட்டமிட்டிருப்பதாகவும், அதுமட்டுமின்றி புதிதாக சில மாஸ் நடிகர்களை இணைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில், "ஜெயிலர் 2’ திரைப்படத்தில் தனுஷுக்கு ஒரு கதாபாத்திரத்தை நெல்சன் கொடுக்க இருப்பதாகவும், அதற்கு ரஜினி ஒப்புதல் கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, "ஜெயிலர் 2’ படத்தின் பூஜைக்கு ஐஸ்வர்யாவை வரவழைக்க நெல்சன் முடிவு செய்து, அதற்கான முயற்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. "ஜெயிலர் 2’ திரைப்படத்தில் தனுஷ் நடிப்பது உறுதி செய்யப்பட்டால், அவர் பூஜைக்கு வருகை தந்தால், தனுஷ்-ஐஸ்வர்யா சந்திப்பு நடைபெறும் வாய்ப்பு இருப்பதாகவும், அவர்கள் இருவரும் இணைய அது ஒரு அடித்தளமாக அமையும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே, நேற்று தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கின் நீதிமன்ற விசாரணைக்கு இருவருமே ஆஜராகாததால், அது ஒத்திவைக்கப்பட்டதாக குறிப்பிடத்தக்கது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை கொண்டுவர இயக்குனர் மிகப்பெரிய திட்டம் தீட்டி உள்ளதாக கூறப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த "வேட்டையன்" திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் "கூலி" என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் உருவாக இருக்கும் "ஜெயிலர் 2" படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், "ஜெயிலர்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த நடிகர்களுக்கு "ஜெயிலர் 2’ கூடுதல் வாய்ப்பு தர நெல்சன் திட்டமிட்டிருப்பதாகவும், அதுமட்டுமின்றி புதிதாக சில மாஸ் நடிகர்களை இணைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில், "ஜெயிலர் 2’ திரைப்படத்தில் தனுஷுக்கு ஒரு கதாபாத்திரத்தை நெல்சன் கொடுக்க இருப்பதாகவும், அதற்கு ரஜினி ஒப்புதல் கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, "ஜெயிலர் 2’ படத்தின் பூஜைக்கு ஐஸ்வர்யாவை வரவழைக்க நெல்சன் முடிவு செய்து, அதற்கான முயற்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. "ஜெயிலர் 2’ திரைப்படத்தில் தனுஷ் நடிப்பது உறுதி செய்யப்பட்டால், அவர் பூஜைக்கு வருகை தந்தால், தனுஷ்-ஐஸ்வர்யா சந்திப்பு நடைபெறும் வாய்ப்பு இருப்பதாகவும், அவர்கள் இருவரும் இணைய அது ஒரு அடித்தளமாக அமையும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே, நேற்று தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கின் நீதிமன்ற விசாரணைக்கு இருவருமே ஆஜராகாததால், அது ஒத்திவைக்கப்பட்டதாக குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com