ஒரு அசுரன் அல்ல, இரண்டு அசுரன்கள்; தனுஷ் குறித்து வெற்றிமாறன்
- IndiaGlitz, [Thursday,March 28 2019]
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி வரும் 'அசுரன்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்து வருவதாக தெரிய வந்துள்ளது.
அப்பா மற்றும் மகன் என இரண்டு வித்தியாசமான கேரக்டர்களில் தனுஷ் நடித்து வருவதாகவும், இதில் அப்பா கேரக்டரில் தனுஷின் வயது 45 என்றும், இந்த படத்தில் தனுஷ், இரண்டு அசுரன்களாக தெரிவார் என்றும் இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார். ஒரு மலையேறும் காட்சியில் மலையேறி, இறங்க 6 மணி நேரம் ஆகியும் எந்தவித சலிப்பும் இன்றி தனுஷ் நடித்ததாகவும், அவருடன் பணிபுரியும் ஒவ்வொரு படத்திலும் அவர் தன்னை நடிப்பால் ஆச்சரியப்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் மஞ்சுவாரியர், பசுபதி, பாலாஜி சக்திவேல் ஆகியோர், தான் எதிர்பார்த்ததைவிட நல்ல ஒத்துழைப்பையும் அபார நடிப்புத்திறமையை வெளிப்படுத்தி வருவதால் இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்ற வெற்றிமாறன், இந்த படம் 'வெக்கை' என்ற நாவலை மையப்படுத்தி உருவாகி வருவதாகவும் தெரிவித்தார். ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கிய 'விசாரணை' திரைப்படம் 'லாக்கப்' என்ற நாவலின் தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது
ஜிவி பிரகாஷ் இசையில் வேல்ராஜ் ஒளிப்பதிவில் விவேக்ஹர்சன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார்.