'கொடி: தனுஷின் இரட்டை வேட ரகசியம்

  • IndiaGlitz, [Thursday,July 14 2016]

தனுஷ் முதல்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ள 'கொடி' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் தனுஷ் அண்ணன்-தம்பி வேடத்தில் நடித்துள்ளதாகவும், அண்ணன் அரசியல்வாதி வேடத்திலும், தம்பி ரெளடி கெட்டப்பிலும் நடித்துள்ளதாகவும் கூறப்பட்டது.
ஆனால் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி இந்த படத்தில் தனுஷ் அண்ணன் -தம்பியாக நடிக்கவில்லை என்றும் அப்பா - மகன் கேரக்டர்களில் நடித்துள்ளதாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் கசிந்துள்ளது. அப்பா தனுஷ் ஒருசில காட்சிகளில் வயதான தோற்றத்திலும் நடித்திருப்பதாகவும் இரண்டு வேடங்களை வித்தியாசப்படுத்த தனுஷ் சிறப்பு அக்கறை எடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
தனுஷ், த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை 'எதிர்நீச்சல், 'காக்கி சட்டை' பட இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு வெங்கடேஷ் ஒளிப்பதிவும், ப்ரவீன் படத்தொகுபும் செய்துள்ளனர்.