'பிரேமம்' தமிழ் ரீமேக் குறித்து தனுஷ் விளக்கம்

  • IndiaGlitz, [Wednesday,November 11 2015]

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான மலையாள படமான 'பிரேமம்' கேரளாவில் மட்டுமின்றி சென்னையிலும் மாபெரும் வசூலை கொடுத்தது. சென்னையில் 150 நாட்களுக்கு மேல் ஓடிய மலையாள படம் என்ற பெருமையையும் இந்த படம் பெற்றது.

நிவின்பாலி, மடோனா செபாஸ்டியன் நடித்த இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தனுஷ் பெற்றிருப்பதாகவும், விஜய்சேதுபதி நடிப்பில் இந்த படத்தின் ரீமேக் விரைவில் உருவாகவிருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி தனுஷ் இந்த படத்தின் ரீமேக் உரிமையை பெறவில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனுஷின் அண்ணன் செல்வராகவன், 'பிரேமம்' படத்தை பார்த்துவிட்டு, இயக்குனருக்கு தனது பாராட்டை தெரிவித்துவிட்டு, யாரும் இந்த படத்தை ரீமேக் செய்ய வேண்டாம் என்று கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரஜினியின் டைட்டிலில் ரெளடி நடிகர்?

கடந்த ஆயுதபூஜை தினத்தில் வெளியான விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்த 'நானும் ரெளடிதான்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து...

'வேதாளம்' படத்தை பார்த்த சினிமா பிரபலங்கள்

அஜீத் நடித்த 'வேதாளம்' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல பாசிட்டிவ் விமர்சனங்களுடன் வெற்றி நடைபோட்டு கொண்டிருக்கின்றது....

கபாலி-விஜய் 59 இடையே உருவான வித்தியாசமான போட்டி

பிரபல தயாரிப்பாளரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான கலைப்புலி எஸ்.தாணு, தற்போது ஒரே சமயத்தில் இரண்டு பெரிய நடிகர்களின்...

'விஜய் 59' பாடல்கள் குறித்து புதிய தகவல்கள்

விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில்....

ஸ்ரீதேவியின் சம்பள பாக்கி புகாருக்கு 'புலி' தயாரிப்பாளர்கள் பதில்

விஜய் நடித்த 'புலி' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த ஸ்ரீதேவி, தனக்கு இன்னும் ரூ.50 லட்சம் சம்பள பாக்கியை 'புலி' படதயாரிப்பாளர்கள் தரவில்லை என்று புகார் கூறியுள்ள நிலையில் புலி...