'ராட்சசன்' இயக்குனருடன் தனுஷ் இணையும் படம்: ஒரு ஆச்சரிய தகவல்

  • IndiaGlitz, [Monday,November 23 2020]

விஷ்ணு விஷால் நடிப்பில் ராம்குமார் இயக்கிய ’ராட்சசன்’ திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தை அடுத்து தனுஷ் நடிப்பில் ஒரு படத்தை இயக்குனர் ராம்குமார் இயக்க இருக்கிறார் என்றும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’ராட்சசன்’ இயக்குனர் ராம்குமார் உடன் தனுஷ் இணையும் படம் குறித்த ஒரு ஆச்சரிய தகவல் வெளிவந்துள்ளது. இந்த படம் தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி பான்-இந்தியா திரைப்படமாக உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே தென்னிந்தியாவில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் தனுஷ் பிரபலம் என்பதால் தனுஷின் இந்த படத்தை பான்-இந்தியா படமாக உருவாக்குவதற்கு இதுதான் சரியான நேரம் என்று படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்

தனுஷ் தற்போது ’கர்ணன்’ மற்றும் ’ஜகமே தந்திரம்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ள நிலையில் ஹிந்தி படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதனை அடுத்து கார்த்திக் நரேன் படத்தில் நடிக்கும் தனுஷ் அதன்பின்னர் ’ராட்சசன்’ ராம்குமார் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

நிலாவுக்கு ஆளில்லா விண்கலம் அனுப்பி பூமிக்குக் கற்களைக் கொண்டுவரும் முயற்சி!!!

நிலாவில் அமெரிக்கா, ரஷ்யா போன்ற சில நாடுகள் மட்டும் தொடர்ந்து தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.

மாலத்தீவுக்கு நீங்களும் போயிட்டீங்களா? சமந்தாவின் அசத்தல் புகைப்படங்கள் 

கடந்த சில நாட்களாக மாலத்தீவில் தமிழ் நடிகைகள் குவிந்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. ஏற்கனவே தேனிலவு கொண்டாட தனது கணவருடன் காஜல் அகர்வால் சென்றதை அடுத்து நடிகைகள் பிரணிதா சுபாஷ்,

லம்பாடி இனத்தில் இருந்து முதல் பெண் மருத்துவர்… குவியும் பாராட்டு!!!

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மருத்துவப் படிப்பு மிகவும் போற்றத்தக்க ஒன்றாக இருந்து வருகிறது.

தகாத உறவை மறைக்க ரூ.12 கோடி மதிப்புள்ள பரிசுப்பொருள்… இளவரசியின் குட்டு அம்பலம்!!!

துபாய் இளவரசியான ஹயா தனது மெய்க்காப்பாளர்களுள் ஒருவரான ரஸ்ஸல் ஃப்ளவர்ஸ் என்பவருக்கு ரூ.12 கோடி மதிப்புள்ள கடிகாரம் மட்டுமல்லாது பல விலையுயர்ந்த பொருட்களை பரிசாகக் கொடுத்துள்ளார்

போதை பொருள் விவகாரத்தால் நின்றுபோன பிரபல நடிகரின் திருமணத்தில் திடீர் திருப்பம்!

கடந்த சில மாதங்களாக திரையுலகினர் இடையே போதைப்பொருள் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது தெரிந்ததே. பாலிவுட் நடிகை ரியோ சக்கரவர்த்தி