தனுஷின் 'தொடரி' ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Saturday,March 26 2016]

பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'தொடரி' என்ற படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் நேற்று முன் தினம் வெளியாகி தனுஷ் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

'தொடரி' படம் வரும் மே மாதம் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தகவல்கள் வெளிவந்துள்ளது. ஜூன் முதல் வாரத்தில் பள்ளி, கல்லூரிகள் திறந்துவிடும் என்பதால் கோடை விடுமுறைக்குள் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்த படக்குழு மே கடைசி வாரத்தை தேர்வு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பூச்சியப்பன் என்ற ரயில்வே பேண்டரி ஊழியராக தனுஷும், சரோஜா என்ற கேரள பெண் வேடத்தில் கீர்த்தி சுரேஷும் இந்த படத்தில் நடித்துள்ளனர். மேலும் கணேஷ் வெங்கட்ராமன், ஹரிஷ் உத்தமன, தம்பி ராமையா, ராதாரவி, கருணாகரன், ஆர்.வி.உதயகுமார் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் ரயிலில் படமாக்கப்பட்டுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பை இந்த படம் ஏற்படுத்தியுள்ளது.