வெங்கட்பிரபுவுடன் இணைந்த 'கபாலி' நடிகை

  • IndiaGlitz, [Sunday,July 31 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தில் ரஜினிக்கு அடுத்தபடியாக பாசிட்டிவ் விமர்சனம் பெற்றவர் தன்ஷிகா. அதிரடி ஆக்சன் காட்சிகளில் அசால்ட்டாக நடித்திருந்த தன்ஷிகா, 'கபாலி'க்கு முன்னரே நடித்து வந்த 'விழித்திரு' திரைப்படம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
விதார்த்-தன்ஷிகா ஜோடியாக நடித்துள்ள இந்த படத்தில் வெங்கட்பிரபு ஒரு குழந்தைக்கு தந்தை என்ற கேரக்டரில் நடித்துள்ளார். சென்னையில் ஒரே ஒரு நாளில் நடக்கும் சம்பவம்தான் இந்த படத்தின் கதை. சென்னை அண்ணாசாலை, ரிச்சி ஸ்ட்ரீட், மற்றும் வேப்பேரி ஆகிய பகுதிகளில் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துள்ளது.
'அவள் பெயர் தமிழரசி' படத்தை இயக்கிய மீரா கதிரவன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு பிரபல பாடகர் சத்யன் மகாலிங்கம் இசையமைத்துள்ளார். 'கபாலி'க்கு பின்னர் வரும் தன்ஷிகா படம் என்பதால் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.