பெண் இயக்குனரின் இயக்கத்தில் தன்ஷிகா படம்.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!
- IndiaGlitz, [Sunday,March 24 2024]
டான்ஸ் மாஸ்டர் மற்றும் இயக்குனரான ராதிகாவின் இயக்கத்தில் நடிகை சாய் தன்ஷிகா நடிக்கும் படம் குறித்த ஃபர்ஸ்ட் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஜெயம் ரவி நடித்த ‘பேராண்மை’ என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை தன்ஷிகா அதன் பிறகு ’மாஞ்சா வேலு’ ’அரவான்’ ’பரதேசி' ’கபாலி’ உட்பட பல திரைப்படங்களில் நடித்தார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான விஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்திற்கு பிறகு அவர் தமிழில் நடிக்காத நிலையில் தற்போது அவர் பெண் இயக்குனர் ராதிகாவின் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ’ப்ரூஃப்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல டான்ஸ் மாஸ்டர் ஆன ராதிகா என்பவர் ஏராளமான படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றிய நிலையில் தற்போது அவர் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். அவரது இயக்கத்தில் உருவாகும் படத்தில் தான் சாய் தன்ஷிகா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் , தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இந்த படத்திற்கு ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவும், தீபக் இசையும் கமலக்கண்ணன் படத்தொகுப்பு பணியையும் செய்கின்றனர்.
இந்த படத்தின் போஸ்டரில் அதிரடி ஸ்டண்ட் காட்சிகள் அதாவது ரத்த வெள்ளத்தில் இருக்கும் ஒருவரின் மீது தன்ஷிகா கால் வைத்திருக்கும் வகையில் இருப்பதை பார்க்கும் போது இது ஒரு அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.