நைட்கிளப்பில் சண்டை: நடிகை தன்ஷிகா காயம்
- IndiaGlitz, [Saturday,December 22 2018]
'கபாலி' பட நடிகை தன்ஷிகாவுக்கு படப்பிடிப்பின்போது காயம் ஏற்பட்டதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தில் ரஜினியின் மகள் யோகியாக நடித்த தன்ஷிகா தற்போது 'யோகி டா' என்ற படத்தில் நடித்து வருகிறார். கவுதம் கிருஷ்ணா இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கோவையில் நடைபெற்று வருகிறது.
இந்த படப்பிடிப்பில் நைட் கிளப் ஒன்றில் ரெளடிகளுடன் தன்ஷிகா சண்டை போடும் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. இந்த காட்சியில் தன்ஷிகா டூப் இன்றி நடித்தபோது சில நொடிகள் டைமிங் மிஸ் ஆனதால் பீர் பாட்டில் தன்ஷிகாவின் மீது உடைந்தது இதனால் தன்ஷிகா காயமடைந்தார். இதனையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு தன்ஷிகா அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஒருசில நாட்களில் தன்ஷிகா குணமானதும் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.