'கபாலி'யில் தன்ஷிகாவின் வித்தியாசமான லுக்?
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மிக விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தேவும், ரஜினிக்கு மகளாக தன்ஷிகாவும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்நிலையில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் ராதிகா ஆப்தே, குடும்பப்பெண் வேடத்தில் நடித்து வரும் நிலையில் அவருடைய மகளாக நடிக்கும் தன்ஷிகா அதற்கு முற்றிலும் மாறுபட்டு ஆண் தன்மையுள்ள கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே தன்ஷிகா போதை பழக்கத்திற்கு அடிமையாகி, வில்லன் குரூப்பில் மாட்டிக்கொள்வது போன்ற காட்சிகள் இந்த படத்தில் இருப்பதாக செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி அவருக்கு ஆண்கள் அணியும் காஸ்ட்யூம்களுடன், ஷார்ட் ஹேர்ஸ்டைல் லுக்கில் தோன்றுவதாக கூறப்படுகிறது.
சென்னையில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடந்தவுடன், அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக 'கபாலி' படக்குழுவினர் மலேசியா மற்றும் ஹாங்காக் செல்லவுள்ளனர். பா.ரஞ்சித் இயக்கி வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார். கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை பெரும்பொருட்செலவில் தயாரித்து வருகிறார். 2016ஆம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டில் இந்த படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout