தனுஷின் 'நானே வருவேன்' ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வமாக அறிவித்த கலைப்புலி எஸ்.தாணு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான 'நானே வருவேன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படம் இம்மாத இறுதியில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்திருந்த நிலையில் சற்று முன் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் ’நானே வருவேன்’ திரைப்படம் செப்டம்பர் 29ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் ரிலீஸ் குறித்து போஸ்டரையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் இந்த படத்தில் அண்ணன் தம்பி என இரண்டு கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் இருவருக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் இந்த படத்தின் கதை என்பது டீசரில் இருந்து தெரிய வந்தது. மேலும் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யுஏ’ சான்றிதழ் அளித்து உள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெளியாவதற்கு முந்தைய நாள் ’நானே வருவேன்’ திரைப்படம் வெளியாவதால் அடுத்தடுத்து சினிமா ரசிகர்களுக்கு இரண்டு சிறப்பான படங்களை பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கதாநாயகன் வில்லன் என இரண்டு வித்தியாசமான கேரக்டர்களில் தனுஷ் நடித்துள்ள இந்த படத்தில் எல்லி அவ்ரம், இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் தனுஷின் அடுத்த வெற்றிப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
We are extremely happy to announce that #NaaneVaruvean is releasing worldwide on September 29th! @dhanushkraja @selvaraghavan @thisisysr @theedittable @omdop @Rvijaimurugan @saregamasouth pic.twitter.com/nUMH73nVPr
— Kalaippuli S Thanu (@theVcreations) September 20, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments