close
Choose your channels

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு: 'தி டர்ட்டி பிக்சர்ஸ் 2' படத்தில் தனுஷ் நாயகியா?

Sunday, August 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவின் கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு ‘தி டர்ட்டி பிக்சர்ஸ்’ என்ற பெயரில் பாலிவுட்டில் திரைப்படமானது. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது இரண்டாம் பாகம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் கவர்ச்சி நாயகியாக வலம் வந்த சில்க் ஸ்மிதா, பல வெற்றி படங்களில் நடித்தார் என்பதும் அவரது கவர்ச்சி நடனத்திற்காகவே பல படங்கள் சூப்பர் ஹிட்டாகின என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சில்க் ஸ்மிதா தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்தாலும், அவரது சொந்த வாழ்வில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக திடீரென தற்கொலை செய்து கொண்டார். அவரது மறைவு தமிழ் சினிமாவில் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்த நிலையில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து பாலிவுட்டில் ‘தி டர்ட்டி பிக்சர்ஸ்' என்ற திரைப்படம் உருவானது என்பதும் சில்க்ஸ்மிதா வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகை வித்யாபாலன் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் ‘தி டர்ட்டி பிக்சர்ஸ் இரண்டாம் பாகத்தில் நடிக்க பல நடிகைகள் பரிசீலிக்கப்பட்டதாகவும் தற்போது வந்த தகவலின்படி இந்த படத்தில் பிரபல நடிகை டாப்ஸி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தனுஷின் ’ஆடுகளம்’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி அதன் பின்னர் அஜித்தின் ’ஆரம்பம்’ உள்பட ஒருசில படங்களில் நடித்த டாப்ஸி தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் ‘தி டர்ட்டி பிக்சர்ஸ் 2’ படத்தில் நடிப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment