'கங்குவா' ரிலீஸ் தேதி மாற்றத்திற்கு இதுதான் காரணம்: தனஞ்செயன் பேட்டி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடித்த ’கங்குவா’ திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அதே தேதியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’வேட்டையன்’ திரைப்படம் வெளியாவதால் ’கங்குவா’ படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ’கங்குவா’ ரிலீஸ் எப்போது? ரிலீஸ் செய்து தள்ளி வைக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து சமீபத்தில் பேட்டி அளித்த தனஞ்செயன் கூறியுள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:
’கங்குவா’ திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி தான் வெளியாக இருந்தது. ஆனால் ’வேட்டையன்’ படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டதால், தயாரிப்பாளர் ஞானவேல் ரஜினியின் தீவிர ரசிகர் என்பதால் தான், வேறு நாளில் ’கங்குவா’ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்.
இந்த படம் ஹிந்தியில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் வெளியாக உள்ளதால் இந்தியாவில் மட்டும் 3000க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் வட இந்தியாவை பொருத்தவரை திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்களுக்கு பின்னரே ஓடிடியில் வெளியாக வேண்டும் என்ற மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் விதிகள் இருப்பதால் அதை அனுசரித்து ’கங்குவா’ படத்தின் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்படும் என்றும் ’கங்குவா’ திரைப்படம் இன்னும் இரண்டு மாதங்களில் ரிலீஸ் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்பட 10 மொழிகளில் வெளியாவதால் அனைத்து மொழிகளுக்கும் ஏற்றவாறு ரிலீஸ் தேதியை அமைக்க தயாரிப்பாளர் திட்டமிட்டு வருவதாகவும் தனஞ்செயன் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout