close
Choose your channels

'தேங்க்யூ தனா.. கோபமாக பேசிய தனலட்சுமியிடம் நாகரீகமாக நடந்து கொண்ட ஷிவின்!

Monday, November 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவின் தன்னிடம் தனலட்சுமி கோபமாக பேசிய போதிலும் தேங்க்யூ என கூறிவிட்டு நாகரீகமாக அந்த இடத்தை விட்டு சென்ற காட்சியின் வீடியோ வெளியாகியுள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார கேப்டன்ஸி டாஸ்க்கில் ஆதங்கம் அடைந்த தனலட்சுமி ஆவேசமாக பேசிய முதல் புரமோ வீடியோவை பார்த்தோம். இந்த நிலையில் இன்றைய இரண்டாவது புரமோவிலும் தனலட்சுமி கேப்டன் டாஸ்க் குறித்த பிரச்சனை தான் வந்துள்ளது.

‘என்ன பிரச்சனை உனக்கு’ என்று தனலட்சுமியிடம் கேப்டன் மைனா கேட்க அதற்கு அவர் விளக்கமளிக்கிறார். அப்போது ஷிவின் சில கருத்துக்களை கூற வரும் போது நீ இந்த பிரச்சனையில் தலையிடாதே, நீ எதற்காக இதில் நுழைகிறாய், இதை பற்றி நீ பேசாதே’ என ஆவேசமாக கூறுகிறார்.

அதற்கு ஷிவின் விளக்கம் அளிக்க முன்வந்த போதிலும் அதை தடுத்து என்னிடம் நீ பேசாதே என்று மீண்டும் கூறியதை அடுத்து ’தேங்க் யூ தனா’ என கூறிவிட்டு ஷிவின் அந்த இடத்தை விட்டுச் சென்று விடுகிறார்.

முதல் நாளிலிருந்தே ஷிவின் மிகவும் மெச்சூரிட்டி ஆக இந்த விளையாட்டை விளையாடி வரும் நிலையில் அவருக்கு பார்வையாளர்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது. ஆனால் நாளுக்கு நாள் பார்வையாளர்களிடம் கெட்ட பெயர் வாங்கி வரும் தனலட்சுமி, ஷிவினிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதை அடுத்து அவர் இந்த வார நாமினேஷனில் சிக்கினால் நிச்சயம் வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment