தனலட்சுமி கூறிய ஒரே ஒரு வார்த்தை.. ஜெயிலுக்கு அனுப்பிய பிக்பாஸ்!

தனலட்சுமி கூறிய ஒரே ஒரு வார்த்தையால் போட்டியாளர்களில் ஒருவரை பிக்பாஸ் ஜெயிலுக்கு அனுப்பி உள்ளது பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க்கை வைப்பார் என்பதும் அந்த டாஸ்க்கை சரியாக விளையாடாத ஒருவர் அல்லது இருவரை சிறைக்கு அனுப்புவது வழக்கமாக உள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த வாரம் தொலைக்காட்சி டாஸ்க்கில் சரியாக விளையாடாத மோசமான போட்டியாளர் யார் என்பதை தேர்வு செய்ய வேண்டும் என பிக்பாஸ் கூறுகிறார்.

இதனை அடுத்து அசீம் மகேஸ்வரியை மோசமான போட்டியாளர் என்று கூறினார். அதன் பிறகு ஏடிகே, தனலட்சுமி மோசமான போட்டியாளர் என்று கூறியதோடு அவர் சுயநலத்துடன் விளையாடுகிறார் என்று கூறினார். இதனை அடுத்து வந்த மணிகண்டன் ஷெரினாவை கூறினார்.

இதனையடுத்து டீமில் சரியாக விளையாடவில்லை என்று பார்த்தால் அது ராமை தான் கூறுவேன் என்று தனலட்சுமி கூற ராம் உடனே கோபப்பட்டார். காரணத்தை ஒழுங்காக சொல்லு, ஹெல்த் பிரச்சனை பற்றியெல்லாம் நீ சொல்வது சுத்தமா சரி கிடையாது’ என்று கூறுகிறார். அதற்கு தனலட்சுமி திமிராக 'ஒழுங்கா தான் சொல்லியிருக்கிறேன்’ என்று கூறியவுடன் ராம் கோபத்துடன் சிறைக்குச் செல்கிறார்.

ஏற்கனவே ராம் ஜனனி உடன் சமீபத்தில் சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.