ஆயிஷா போயிருவாங்க.. தனலட்சுமியின் பதிலை அடுத்து கமல்ஹாசனின் அதிரடி!

ஆயிஷா எவிக்ட் ஆகி இந்த நிகழ்ச்சியிலிருந்து போயிருவாங்க.. என்று தனலட்சுமி கூறியதை அடுத்து கமல்ஹாசன் அதிரடியாக இந்த வாரம் எலிமினேட் ஆகும் நபரின் பெயரை அறிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் எலிமினேஷன் செய்யப்படுவார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்ட 5 பேர்களில் குறைந்த வாக்குகள் பெற்ற ஷெரினா வெளியேறிவிட்ட தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் இந்த வாரம் யார் வெளியே போவார்கள் என்பதை கணிக்க கமல்ஹாசன் கேட்கிறார். அப்போது ஆயிஷா, ‘நான் போகவேண்டுமே என்று ஆசை என்று கூறினார். ஷெரினா கூறும்போது, ‘எனக்கு எதுவாக இருந்தாலும் சரி, 50 சதவீதம் இருக்க வேண்டும் என்றும் 50% போகவேண்டும் என்று நினைக்கிறேன் என்று கூறுகிறார்.

இதுகுறித்து ஏடிகே கூறியபோது ஆயிஷா எலிமினேஷன் ஆக மாட்டார் என்று எனக்கு தோன்றுகிறது என்று கூறினார். ரக்சிதா கூறியபோது, ‘ஷெரினா வெளியே போவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்று சரியாக கணித்தார்.

இதனை அடுத்து தனலட்சுமி பேசியபோது ’ஆயிஷா போயிருவாங்க என்று நான் நினைக்கிறேன் என்று கூறினார். அப்போது ஆயிஷாவின் முகம் இறுகியது. இதனை அடுத்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளரின் பெயர் கொண்ட அட்டையை எடுத்து கமல்ஹாசன் எடுத்து காண்பிப்பதுடன் இன்றைய புரொமோ முடிவுக்கு வந்துள்ளது.

More News

விஜய்யுடன் நடிப்பது குறித்து கூலான பதில் அளித்த ஷாருக்கான்!

தளபதி விஜய்யுடன் நடிப்பது குறித்து பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கூறிய கூலான பதில் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

'ஆர்.ஆர்.ஆர்' பட நடிகைக்கு பெண் குழந்தை: திரையுலகினர் வாழ்த்து!

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய 'ஆர்.ஆர்.ஆர்'  என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகைக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து திரையுலகினர் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

கமல்ஹாசனின் அடுத்த பட அறிவிப்பு: யாரும் எதிர்பாராத திருப்பம்!

உலகநாயகன் கமல்ஹாசனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் சற்றுமுன் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

நேற்று ரஜினி, இன்று கமல்: அஜித் பட இயக்குனருக்கு அடித்த அதிர்ஷ்டம்?

நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது என்பதும், ரஜினியின் அடுத்த படத்தை அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கவுள்ளார் என்பதும்,

அஜித் விஜய் மோதலில் இணைந்த அனிருத்.. யாருக்கு சாதகம்?

அஜித் நடித்த 'துணிவு' மற்றும் விஜய் நடித்த 'வாரிசு' ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆக இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கு முன்பே மீண்டும்