என்கிட்ட எல்லாரும் மன்னிப்பு கேட்கணும்: தனலட்சுமி ஆவேசம்

என் மீது குற்றம் கூறிய எல்லாரும் என்னிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான தனலட்சுமி ஆவேசமாக கூறிய புரோமோ விடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் தற்போது பொம்மை டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் பொம்மையை எடுக்க போட்டியாளர்கள் சென்றபோது நிவாஷினி மற்றும் ஷெரினாவை தனலட்சுமி கீழே தள்ளி விட்டதாக கூறப்பட்டது. இதனை அடுத்து அசீம், ‘நீயெல்லாம் ஒரு பெண்ணா? என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இதுகுறித்து தனலட்சுமி கூறியபோது ’அசீம் வரும்போதே எல்லோரையும் பிடித்து கீழே தள்ளி விட்டார். நீ எல்லாம் பொண்ணா என்று அத்தனை பேர் முன்னாடி என்னிடம் கேட்டபோது நான் திருப்பி கேட்பதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? நான் அமைதியாக இருந்ததால் என் மேல் குற்றம் சாட்டப்படுகிறது.

கமல் சார் முன்னிலையில் அவர்கள் நடந்து வரும்போது நான் பிடித்து தள்ளியதால் தான் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது என்ற காட்சி இருந்தால் நான் வெளியே போக தயாராக இருக்கிறேன். அதுமட்டுமின்றி எல்லார் முன்னிலையிலும் நான் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவும் தயாராக இருக்கிறேன்.

ஆனால் அப்படி ஒரு காட்சி இல்லை என்றால் என்னை குற்றஞ்சாட்டிய எல்லோரும் என்னிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என ஆவேசமாக கூறுகிறார். தனலட்சுமியின் ஆவேசத்தை பார்க்கும்போது இந்த வாரம் நிச்சயம் ஒரு குறும்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.