பொண்ணு தான நீயும், அறிவில்லையா? அசீம் ஆவேசமாக திட்டுவது யாரை?

பிக்பாஸ் வீட்டை பொருத்தவரை எப்பொழுதெல்லாம் பொம்மை டாஸ்க் வருகிறதோ அப்போதெல்லாம் போட்டியாளர்கள் மத்தியில் கடும் சண்டை ஏற்படும் என்பது தெரிந்ததே. கடந்த சீசன்களிலும் பொம்மை டாஸ்க்கின்போது போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் ஆக்ரோஷமாக மோதி கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த வாரமும் பொம்மை டாஸ்க் நடைபெற்று வருவதை அடுத்து ஏற்கனவே பல போட்டியாளர்கள் இடையே சண்டை மூண்டு விட்டது. குறிப்பாக மணிகண்டன் ஆவேசமாக கோபப்பட்டது, என்னைவிட உலகத்துல கெட்டவ யாருமே இல்லை என ஜனனி ஆத்திரமாக கூறியது, மகேஸ்வரி மற்றும் தனலட்சுமி மோதல் ஆகியவை கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியாகியுள்ள முதல் புரமோவில் பஸ்ஸர் ஒலித்தவுடன் பொம்மைகளை எடுக்க ஆவேசமாக ஒருவரை ஒருவர் முண்டியடிக்கின்றனர். அப்போது ஷெரினா மற்றும் நிவாசினியை தனலட்சுமி ஆவேசமாக தள்ளிவிட்டு பொம்மையை எடுக்கிறார்.

இதை பார்த்த சக போட்டியாளர்கள் தனலட்சுமியை திட்டுகின்றனர். குறிப்பாக அசீம், ‘நீயும் ஒரு பொண்ணுதான, அறிவு என்பது கொஞ்சம் கூட உனக்கு இல்லையா? நிவாஷினியையும், ஷெரினையும் அப்படி தள்ளி விடுகிறாய், உனக்கு உண்மையாக ஸ்போர்ட்ஸ் திறமை இருந்தால் அதை வெளியில் போய் காட்டு’ என பயங்கரமாக கோபப்படுகிறார்.

இதனை தனலட்சுமி முறைப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்று ஒரு மிகப்பெரிய பஞ்சாயத்து இருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.