விக்ரமனுக்கு ஃப்ரீ அட்வைஸ் கொடுக்கும் தனலட்சுமி.. என்ன சொன்னார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் இந்த நிகழ்ச்சியை போட்டியாளரகள் சரியாக புரிந்து கொண்டு விளையாடி வருவதாகவே தெரிகிறது.

குறிப்பாக விக்ரமன் நிகழ்ச்சியை முழுவதுமாகப் புரிந்துகொண்டு மெச்சூரிட்டியுடன் விளையாடுவதாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று வைக்கப்பட்ட டாஸ்க்கில் வெற்றி பெற்ற தனலட்சுமி அனைவருக்கும் ஃப்ரீ அட்வைஸ் கொடுக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது. இதனை அடுத்து அவர் ஒவ்வொரு போட்டியாளருக்கும் தனது அட்வைஸ் கூறுகிறார்.

அப்போது அவர் விக்ரமனுக்கு கூறும்போது ’ஒரு விஷயத்தை நீங்கள் பேசும்போது அவருடைய கேரக்டருக்கு அது பொருந்துமா என்பதை புரிந்து கொண்டு பேச வேண்டும் என்று கூறினார். அதேபோல் ராமுக்கு அவர் அட்வைஸ் கொடுக்கும்போது நான் வேலை செய்யவில்லை என்று சொல்கிறார்கள், ஜெயிலில் வைக்குறார்கள் என்று கூறும் நீங்கள் அதற்கேற்றபடி நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.

ஷிவின் பற்றி கூறியபோது முதலில் இருந்த ஆக்டிவான ஷிவின் தற்போது இல்லை என்று கூறுகிறார். அசீம் குறித்து கூறிய போது ’நீங்கள் பேசவேண்டும் என்பதற்காக பேசாமல் இரு தரப்பின் கருத்தை கேட்ட பிறகு பேச வேண்டும்’ என்று கூறுகிறார்.

இவ்வாறு ஒவ்வொரு போட்டியாளர்களுக்கு தனலட்சுமி ஃப்ரீ அட்வைஸ் கொடுக்கும் காட்சிகள் இன்றைய முதல் புரமோ வீடியோவில் உள்ளது.