என்னை மன்னிச்சிருங்க, தயவுசெஞ்சு இதை ஒளிபரப்பாதீங்க.. பிக்பாஸிடம் மன்னிப்பு கேட்ட தனலட்சுமி!

தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள் என்றும் இனிமேல் இந்த தவறை நான் செய்ய மாட்டேன் என்றும் இதை ஒளிபரப்பாதீங்க என்றும் பிக்பாஸ் இடம் தனலட்சுமி மன்னிப்பு கேட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் இதில் போட்டியாளர்களில் ஒருவரான தனலட்சுமி கிட்டதட்ட சக போட்டியாளர்கள் அனைவரிடமும் சண்டை போட்டு விட்டார் என்பது தெரிந்ததே.

ஒருசில சண்டையில் தனலட்சுமி பக்கம் நியாயம் இருந்ததால் பிக்பாஸ் மற்றும் கமல்ஹாசனே அவருக்கு ஆதரவு அளித்தார்கள். ஆனால் சில சண்டைகளில் அவர் ஓவர் ஆக்ஷன் செய்வதாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் தனலட்சுமிக்கு இன்விசிபிள் என்ற டாஸ்க்கை பிக்பாஸ் கொடுக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த தனலட்சுமி உடனே பெட்டி படுக்கைகளை எடுத்துக்கொண்டு நான் வெளியே போகிறேன் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனை அடுத்து அவர் தனது தவறை புரிந்து கொண்டு தனியாக கேமரா முன் பிக்பாஸிடம் மன்னிப்பு கேட்கிறார். நான் வீட்டில் இருக்கும் போது என் அம்மா ஏதாவது கூறினால் உடனே வீட்டை விட்டு வெளியே போவேன் என்று கோபத்தில் கூறுவது எனக்கு வழக்கமான ஒன்று. அந்த வழக்கத்தில் நான் இங்கேயும் அது மாதிரி வெளியே போகிறேன் என்று கூறிவிட்டேன். நான் அவ்வாறு கூறியிருக்க கூடாது.

எனவே தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள். இனிமேல் இதுபோன்று நான் சத்தியமாக பேசமாட்டேன். நீங்கள் கொடுக்கும் டாஸ்க்கை ஒழுங்காக செய்வேன், ஒழுங்காக நடந்து கொள்வேன் . இந்த ஒரு காரணத்திற்காக என்னை வெளியே அனுப்பி விடாதீர்கள்.

ஒருவேளை மக்கள் எனக்கு ஓட்டு போடாமல் வெளியே அனுப்பினார்கள் என்றால் அது ஓகே. ஆனால் நீங்கள் இந்த காரணத்திற்காக என்னை வெளியே அனுப்பி விடாதீர்கள். அதேபோல் இதை தயவு செய்து ஒளிபரப்பாதீங்க.. என்று கூறியுள்ளார். தனலட்சுமி ஒளிபரப்பாதீங்க.. என்று சொல்லியும் இந்த காட்சி ஒளிபரப்பாகிவிட்டதை அடுத்து இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

More News

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெத்துக்கிலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கா: 'யூகி' டிரைலர்

கதிர் மற்றும் கயல் ஆனந்தி நடித்த 'பரியேறும் பெருமாள்' என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது மீண்டும் இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் 'யூகி'.

கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் திருமண தேதி எப்போது? 

தமிழ் திரைஉலகில் ஏற்கனவே பல நட்சத்திர ஜோடிகள் திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் சமீபத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் தங்கள் காதலை வெளிப்படுத்தினார்

தனலட்சுமி 'பளார்' என்ற அறை வாங்குவார் என கமல் முன் கூறிய அசீம்! என்ன காரணம்?

தனலட்சுமி இங்கே நடந்து கொள்வது போன்று வெளியில் நடந்து கொண்டால் 'பளார்' என்று அறை தான் வாங்குவார் என கமல்ஹாசன் முன்னிலையில் அசீம் கூறிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கார்த்தியின் 'ஜப்பான்' படம்: சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

 கார்த்தி நடிப்பில் ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகும் 'ஜப்பான்'  என்ற திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் பூஜையுடன்

வீட்டிற்குள் 2 அடியில் தண்ணீர்: இசையமைப்பாளரின் புகாருக்கு தமிழக அமைச்சரின் பதில்!

 சென்னையில் பெய்த கனமழை காரணமாக தனது வீட்டிற்குள் மழைநீர் புகுந்து விட்டது என்றும் இரண்டு அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது என்றும் பிரபல இசையமைப்பாளர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில்