'நான் யாரையும் தலைவரா ஏத்துக்க முடியாது: தனலட்சுமி ஆவேசம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் தலைவர் டாஸ்க் நடத்தப்படும் என்பதும் இந்த டாஸ்க்கில் வெற்றி பெறுபவர் அந்த வாரத்தின் தலைவராக பிக்பாஸ் வீட்டில் இருப்பார் என்பதும் தெரிந்ததே.
அந்த வகையில் இந்த வார தலைவர் டாஸ்க்கில் மைனா நந்தினி வெற்றி பெற்று கேப்டனாக உள்ளார். இதனையடுத்து ஆவேசமான தனலட்சுமி கோபித்துக்கொண்டு அழுதுகொண்டே படுத்திக் கொள்கிறார். அவரை சமாதானப்படுத்த சக போட்டியாளர்கள் வரும்போது, ‘ நான் யாரையும் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நாம் கேம்தானே விளையாடி கொண்டிருக்கின்றோம் என்றும் கோபமாக கூறுகிறார்.
அதன் பிறகு அவர் ரக்சிதாவிடம் தனலட்சுமி வாக்குவாதம் செய்கிறார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே தயவு செய்து நீங்கள் இந்த இடத்தை விட்டு போங்கள் என அழுது கொண்டே தனலட்சுமி கூறும் காட்சியுடன் இன்றைய புரமோ முடிவுக்கு வருகிறது.
ஒவ்வொரு வாரமும் தலைவர் டாஸ்க்கில் ஒரு சில பிரச்சனைகள் ஏற்பட்டாலும் இந்த வாரம் தனலட்சுமி அந்த பிரச்சனையை அதிகமாக்கி உள்ளதாக தெரிகிறது. உண்மையில் தலைவர் டாஸ்க்கில் தனலட்சுமிக்கு துரோகம் இழைக்கப்பட்டதா? மைனாவின் வெற்றி நேர்மையானது இல்லையா என்பதை இன்றைய நிகழ்ச்சியில் தெரிய வரும்.
#Day43 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/JeMlQcGTBW
— Vijay Television (@vijaytelevision) November 21, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout