அரசு பள்ளியில் குழந்தைகளை படிக்க வையுங்கள். பெற்றோர்களுக்கு காமெடி நடிகர் வேண்டுகோள்
Send us your feedback to audioarticles@vaarta.com
பணக்காரர்கள் மட்டுமின்றி நடுத்தர வர்க்கத்தினர்களும் ஏழைகளும் தனியார் பள்ளியில் தங்களை குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்றே இந்த காலத்தில் விரும்புகின்றனர். எல்.கே.ஜி படப்பிடிப்பிற்கே லட்சக்கணக்கில் பணம் கறக்கும் தனியார் பள்ளிகளில் கடன் வாங்கி தங்களுடைய குழந்தைகளை சேர்த்துவிட்டு பின்னர் கஷ்டப்படும் பல பெற்றோர்களை நாம் பார்த்து கொண்டுதான் வருகின்றோம்.
தனியார் பள்ளிகளின் அபரீதமான விளம்பரத்திற்கு மயங்கி பெரும்பாலான பெற்றோர்கள் அந்த பள்ளிகளை நோக்கி படையெடுப்பதால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை வருடத்திற்கு வருடம் குறைந்து வருகிறது. இதனால் ஆசிரியர் பணியிடங்களை குறைப்பதில் தமிழக அரசு, கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க பொதுமக்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரபல நகைச்சுவை நடிகர் தாமு இதுகுறித்து கூறியபோது, 'பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் படிக்க வைக்க முன்வர வேண்டும். அரசுப் பள்ளிகளை நாம் ஊக்குவிப்பது மிக அவசியம் என்றும் தெரிவித்துள்ளார். தாமுவின் கருத்தை பலரும் வரவேற்றுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments