அரசு பள்ளியில் குழந்தைகளை படிக்க வையுங்கள். பெற்றோர்களுக்கு காமெடி நடிகர் வேண்டுகோள்

  • IndiaGlitz, [Wednesday,June 07 2017]

பணக்காரர்கள் மட்டுமின்றி நடுத்தர வர்க்கத்தினர்களும் ஏழைகளும் தனியார் பள்ளியில் தங்களை குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்றே இந்த காலத்தில் விரும்புகின்றனர். எல்.கே.ஜி படப்பிடிப்பிற்கே லட்சக்கணக்கில் பணம் கறக்கும் தனியார் பள்ளிகளில் கடன் வாங்கி தங்களுடைய குழந்தைகளை சேர்த்துவிட்டு பின்னர் கஷ்டப்படும் பல பெற்றோர்களை நாம் பார்த்து கொண்டுதான் வருகின்றோம்.

தனியார் பள்ளிகளின் அபரீதமான விளம்பரத்திற்கு மயங்கி பெரும்பாலான பெற்றோர்கள் அந்த பள்ளிகளை நோக்கி படையெடுப்பதால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை வருடத்திற்கு வருடம் குறைந்து வருகிறது. இதனால் ஆசிரியர் பணியிடங்களை குறைப்பதில் தமிழக அரசு, கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க பொதுமக்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரபல நகைச்சுவை நடிகர் தாமு இதுகுறித்து கூறியபோது, 'பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் படிக்க வைக்க முன்வர வேண்டும். அரசுப் பள்ளிகளை நாம் ஊக்குவிப்பது மிக அவசியம் என்றும் தெரிவித்துள்ளார். தாமுவின் கருத்தை பலரும் வரவேற்றுள்ளனர்.

More News

அஜித்தின் ஹாலிவுட் முன்னோடி நடிகருக்கு இரட்டை குழந்தை

தல அஜித் கடந்த சில வருடங்களாகவே நிஜத்திலும் சரி, திரைப்படங்களிலும் சரி சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் தான் இருக்கின்றார் என்பது அனைவரும் அறிந்ததே...

சிம்புவுடன் சீரியஸாக விவாதம் செய்த லட்சுமி ராமகிருஷ்ணன்

பெண்ணுரிமை, பெண்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகளுக்கு அவ்வப்போது குரல் கொடுப்பவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி தனது மனதில் தோன்றும் கருத்துக்களை பின்விளைவுகள் குறித்து கவலைப்படாமல் வெளிப்படையாக பேசக்கூடியவர்...

சூப்பர் ஸ்டாரின் 'கபாலி'யை அடுத்து புதிய சாதனை நிகழ்த்திய அஜித்தின் 'விவேகம்'

கடந்த சில வருடங்களாக ஒரு திரைப்படம் வெளிவந்து வசூலில் சாதனை செய்வதற்கு முன்னரே அந்த படத்தின் டீசர், டிரைலர், ஆகியவை வெளியாகி யூடியூபில் பார்வையாளர்கள் மற்றும் லைக்குகள் ஆகியவற்றில் சாதனை செய்து வருகிறது.

கோடிகளுக்கு விலைபோகாத விராத்கோஹ்லி! இந்தியன்டா...

கடந்த ஜனவரி மாதம் சென்னை மெரீனாவில் மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு புரட்சி போராட்டத்தில் 'அயல்நாட்டு குளிர்பான நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எப்போது?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்ததால் அவரது தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.