படிச்சு வேலைக்கு போய் குடும்பத்தை காப்பாத்துங்க.. அஜித், விஜய் ரசிகர்களுக்கு டிஜிபி அறிவுரை
Send us your feedback to audioarticles@vaarta.com
இளைஞர்கள் நன்றாக படித்து வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் பாதுகாப்பு இல்லாத செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை கூறியுள்ளார்.
நேற்று கோயம்பேடு பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் அஜித்தின் துணிவு படம் பார்க்க வந்த ரசிகர் அந்த வழியாக சென்ற டேங்கர் அருகில் மேல் ஏறி நடனம் ஆடினார். அப்போது அவர் எதிர்பாராத வகையில் கீழே விழுந்து முதுகு தண்டில் படுகாயம் அடைந்ததால் சிகிச்சையும் பலன்களை உயிரிழந்தார்.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள், ‘ஒரு திரைப்படம் வெளியாகும் போது ரசிகர்கள் பாதுகாப்பு இல்லாத செயல்களில் ஈடுபடக் கூடாது, குறிப்பாக லாரிகள் கண்டெய்னர் மேல் ஏறுவது, கட்அவுட் மேல் ஏறுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
நன்றாக படித்து, வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கும் இளைஞர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு உயிரிழப்பு ஏற்பட்டால் மொத்த குடும்பமும் சிதைந்து விடும் என்றும் அவர் அறிவுரை கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments