படிச்சு வேலைக்கு போய் குடும்பத்தை காப்பாத்துங்க.. அஜித், விஜய் ரசிகர்களுக்கு டிஜிபி அறிவுரை

  • IndiaGlitz, [Thursday,January 12 2023]

இளைஞர்கள் நன்றாக படித்து வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் பாதுகாப்பு இல்லாத செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை கூறியுள்ளார்.

நேற்று கோயம்பேடு பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் அஜித்தின் துணிவு படம் பார்க்க வந்த ரசிகர் அந்த வழியாக சென்ற டேங்கர் அருகில் மேல் ஏறி நடனம் ஆடினார். அப்போது அவர் எதிர்பாராத வகையில் கீழே விழுந்து முதுகு தண்டில் படுகாயம் அடைந்ததால் சிகிச்சையும் பலன்களை உயிரிழந்தார்.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள், ‘ஒரு திரைப்படம் வெளியாகும் போது ரசிகர்கள் பாதுகாப்பு இல்லாத செயல்களில் ஈடுபடக் கூடாது, குறிப்பாக லாரிகள் கண்டெய்னர் மேல் ஏறுவது, கட்அவுட் மேல் ஏறுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

நன்றாக படித்து, வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கும் இளைஞர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு உயிரிழப்பு ஏற்பட்டால் மொத்த குடும்பமும் சிதைந்து விடும் என்றும் அவர் அறிவுரை கூறினார்.

More News

ஆடியன்ஸ் வராததால் 'துணிவு' காட்சி கேன்சலா? தமிழ்நாட்டில் இப்படி ஒரு ஊரா?

அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் நேற்று வெளியாகிய மிகப்பெரிய வசூலை குவித்துள்ளது என்பதும் முதல் நாளுக்குரிய காட்சிக்கு டிக்கெட் கிடைக்காமல் பல ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர் என்பது தெரிந்ததே.

வருமான வரித்துறையில் இருந்து போன் வந்ததும் பயந்துவிட்டேன்: லோகேஷ் கனகராஜ்

வருமானவரித்துறையினரிடம் இருந்து போன் வந்ததும் பயந்துவிட்டேன் என வருமானவரித்துறை ஏற்பாடு செய்த விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசினார்.

மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு செய்தி: 'துணிவு' படம் குறித்து பிரபல இயக்குனர்!

அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் நேற்று வெளியான நிலையில் நேற்று முதல் நாளில் இந்த படம் உலகம் முழுவதும் 30 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

'ரன் பேபி ரன்' படத்தின் ஒன்றரை நிமிட வீடியோ.. முதல்முறையாக காமெடி இல்லாத ஆர்ஜே பாலாஜி!

தமிழ் திரை உலகில் காமெடி நடிகராக நடித்து வந்த ஆர்ஜே பாலாஜி தற்போது சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடித்த 'எல்கேஜி' 'மூக்குத்தி அம்மன்' மற்றும் 'வீட்ல விசேஷம்'

பொங்கல் வின்னர், துணிவும் இல்லை, வாரிசும் இல்லை.. இந்த படம் தான்: நெட்டிசன்கள் அட்ராசிட்டி

அஜித் நடித்த 'துணிவு' மற்றும் விஜய் நடித்த 'வாரிசு' ஆகிய இரண்டு திரைப்படங்கள் பொங்கல் விருந்தாக நேற்று திரையரங்குகளில் வெளியாகி இரண்டு படங்களும் பாசிட்டிவ் விமர்சனங்களை