ஒரே நாளில் அஜித், சூர்யா படங்களின் சூப்பர் அப்டேட் கொடுத்த தேவிஸ்ரீ பிரசாத்.. ரசிகர்கள் குஷி..!

  • IndiaGlitz, [Monday,July 15 2024]

அஜித், சூர்யா ஆகிய இரண்டு மாஸ் நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், இரண்டு படங்களின் சூப்பர் அப்டேட்டை கொடுத்துள்ள நிலையில் ரசிகர்கள் குஷி ஆகி உள்ளனர்.

அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’குட் பேட் அக்லி’ படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசையமைத்து வருகிறார் என்பது தெரிந்தது. அதேபோல் சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’கங்குவா’ படத்தின் இசையமைப்பாளரும் தேவிஸ்ரீ பிரசாத் தான்.

இந்த நிலையில் ’குட் பேட் அக்லி’ படத்தின் சிங்கிள் பாடல் பணிகள் முடிந்து விட்டதாகவும் அஜித் இந்த பாடலுக்கு பயங்கரமாக டான்ஸ் ஆடி உள்ளதாகவும் இந்த பாடலை பார்த்து அசந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அனைவரும் விரும்பும் வகையில் ஆன இந்த பாடல் விரைவில் சிங்கிள் பாடலாக வெளியாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல் ’கங்குவா’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23ஆம் தேதி வெளியாகும் என்றும் தேவிஸ்ரீ பிரசாத் தெரிவித்துள்ளார். ஒரே நாளில் அஜித், சூர்யா படங்களின் அப்டேட் வந்ததை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.