பிரபுதேவாவும் பேயா? 'தேவி 2' டீசர் விமர்சனம்

  • IndiaGlitz, [Tuesday,March 26 2019]

கடந்த 2016ஆம் ஆண்டு பிரபுதேவா, தமன்னா நடிப்பில் இயக்குனர் விஜய் இயக்கிய 'தேவி' திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது. இந்த படத்தில் தேவி, ரூபி என்ற இரண்டு வித்தியாசமான கெட்டப்பில் தமன்னா நடிப்பில் அசத்தியிருப்பார். இதில் ரூபி என்பது பேய் கேரக்டர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியாகியுள்ள 'தேவி 2' டீசரில் ரூபி மட்டுமின்றி பிரபுதேவாவும் பேய் கேரக்டரில் நடித்துள்ளது போல் தெரிகிறது. இதனை கோவை சரளாவின் வசனமும் உறுதி செய்கிறது.

தேவி முதல் பாகத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டிருந்த நிலையில் தேவி 2' இரண்டாம் பாகத்தில் வெளிநாட்டு காட்சிகள் அதிகம் தெரிகிறது. பிரபுதேவாவின் டான்ஸ், தமன்னா, நந்திதாவின் கவர்ச்சியான நடிப்பு, கோவை சரளாவின் காமெடி என இந்த படமும் முதல் பாகம் போலவே த்ரில் மற்றும் காமெடி கலந்த படமாக இருக்கும் என இந்த டீசரில் இருந்து தெரியவருகிறது.

சாம் சி.எஸ் இசை, அயனாங்கே போஸ் ஒளிப்பதிவு, அந்தோணி படத்தொகுப்பு ஆகியவை கச்சிதமாக இருப்பதால் இயக்குனர் விஜய், 'தேவி' படம் போலவே இந்த படத்திலும் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

கமல்ஹாசன் மேற்குவங்கத்திற்கு சென்றுவிடலாம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர்களை அறிவித்த கமல்ஹாசன், அதன் பின்னர் கொல்கத்தா சென்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்தார்.

நானாக இருந்தால் அறைந்திருப்பேன்; நயன்தாரா விவகாரம் குறித்து ஸ்ரீரெட்டி

நடிகை நயன்தாரா - நடிகர் ராதாரவி விவகாரம் கடந்த இரண்டு நாட்களாக திரையுலகம் மட்டுமின்றி அரசியல் உலகிலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஒரு தொகுதி போச்சே! கமல் கட்சி வேட்பாளருக்கு நிகழ்ந்த சோகம்!

சமீபத்தில் கோவையில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர்களை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்தார்.

விஜய்சேதுபதியின் அடுத்த பட டைட்டில் குறித்த தகவல்!

நடிகர் விஜய்சேதுபதி நடித்த 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ளது. மேலும் அவர் நடித்து முடித்துள்ள மற்ரொரு திரைப்படமான 'மாமனிதன்' ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.  

சிறுமியை கொலை செய்து புதைத்ததா திருநாவுக்கரசு கும்பல்? அதிர்ச்சி தகவல்

பொள்ளாச்சி விவகாரத்தில் திருநாவுக்கரசு உள்பட நான்கு பேர் கைது செய்யபப்ட்டு விசாரணை நடந்து வருகிறது.