அஜித் படத்தின் 2ஆம் பாகத்தில் விஜய் மகன்? தேவயானி மகள் தான் நாயகியா?
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்த படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் இயக்க இருப்பதாகவும் அந்த படத்தில் தனது மகளை நாயகி ஆக அறிமுகம் செய்ய இருப்பதாகவும் நடிகை தேவயானியின் கணவரும் இயக்குனருமான ராஜகுமாரன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் விஜய் மகனை ஹீரோவாக்க முயற்சி செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 1999 ஆம் ஆண்டு பார்த்திபன், தேவயானி நடித்த திரைப்படம் ’நீ வருவாய் என’. ராஜகுமாரன் இயக்கிய இந்த திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் அஜித் நடித்திருப்பார்.
இந்த நிலையில் இந்த படத்தில் அஜித்துக்கு பதில் விஜய் தான் முதலில் நடிக்க இருந்ததாகவும் ஆனால் ஒரு சில காரணங்களால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை என்றும் சமீபத்தில் அளித்த பேட்டியில் ராஜகுமாரன் கூறியுள்ளார்.
மேலும் ’நீ வருவாய் என’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டு இருப்பதாகவும், அந்த படத்தில் தன்னுடைய மூத்த மகளை நாயகியாக அறிமுகப்படுத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தேவயானியின் மூத்த மகள் தற்போது கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் நிலையில் விரைவில் அவர் ஹீரோயின் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் விஜய்யின் மகனை கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டும் என்பது தனது விருப்பம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ராஜகுமாரனின் விருப்பத்திற்கு விஜய் மகன் ஒப்புக்கொள்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout