வெள்ளத்தில் சிக்கிய 'தேவ்' படக்குழுவினர்களுக்கு என்ன ஆச்சு?

  • IndiaGlitz, [Tuesday,September 25 2018]

கார்த்தி, ரகுல் ப்ரித்திசிங் நடித்து வரும் 'தேவ்' படத்தின் படப்பிடிப்பு குலுமணாலியில் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் அந்த பகுதியில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவால் படப்பிடிப்பு ரத்தாகியது என்பதை நேற்று பார்த்தோம். மேலும் 'தேவ்' படக்குழுவினர் 140 பேர் வெள்ளத்தில் சிக்கியிருந்ததாகவும் செய்திகள் வெளியானது

இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கிய 140 பேரும் குலுமணாலியில் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும், மாற்று பாதையை கண்டுபிடித்து கார் மூலம் அனைவரும் சண்டிகரை வந்தடைந்து அதன்பின்னர் அங்கிருந்து சென்னைக்கு விமானம் மூலம் பாதுகாப்பாக வந்துவிட்டதாகவும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

குலுமணாலியில் நிலைமை சீரானதும் மீண்டும் படப்பிடிப்பு நடக்கும் என்றும் அல்லது தயாரிப்பாளர், இயக்குனர் கலந்தாலோசித்து வேறு இடத்திற்கு படப்பிடிப்பை மாற்ற வாய்ப்புள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர்.