close
Choose your channels

'இருமுகன்' படத்தில் விக்ரமின் இரண்டு கேரக்டர்கள்

Saturday, February 27, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'அரிமா நம்பி' இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'இருமுகன்' திரைப்படத்தில் முதல்முறையாக விக்ரம் இருவேடங்களில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அவர் இந்த படத்தில் முதன்முதலாக திருநங்கை கேரக்டரில் நடிக்கின்றார் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.


'இருமுகன்' படத்தில் விக்ரமின் இரு வேடங்களில் ஒன்று சீக்ரெட் ஏஜண்ட் ஆகவும், இன்னொரு வேடம் திருநங்கை வேடம் என்று செய்திகள் வெளிவந்துள்ளது. விக்ரம் எந்த கேரக்டரை ஏற்றுக்கொண்டாலும் அந்த கேரக்டராகவே மாறி விடும் தன்மை உடையவர் என்பதால் இந்த கேரக்டரில் அவருடைய நடிப்பை அறிய அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.

விக்ரம் ஜோடியாக நயன்தாரா, நித்யாமேனன் நடித்து வருகின்றனர். சிபுதமீன்ஸ் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். சயின்ஸ் பிக்ஷன் படமான இந்த படம் இவ்வருடத்தின் எதிர்பார்ப்புக்குள்ள படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment