புலி' படத்தில் விஜய்யின் 3 முக்கிய வேடங்கள்
- IndiaGlitz, [Thursday,September 10 2015]
இளையதளபதி விஜய் நடித்துள்ள 'புலி' படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில் இந்த படத்தின் விறுவிறுப்பான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தற்போது வந்திருக்கும் புதிய தகவலின்படி விஜய் இந்த படத்தில் மூன்று வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
அவற்றில் ஒன்று அரசர் காலத்துல் காஸ்ட்யூமில் தோன்றும் போர்வீரன், மற்றொரு முக்கிய கேரக்டராக டிரைலரின் இறுதியில் நீண்ட முடியுடன் நெருப்புகளுக்கு இடையே குதிரையில் வரும் பவர்புல் கேரக்டர், இதனையடுத்து மூன்றாவதாக விஜய், சித்திரக்குள்ளன் கேரக்டரில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. சித்திரக்குள்ளன் விஜய்யுடன் ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, வித்யூலேகா மற்றும் ஷாம்ஸ் ஆகியோர்களும் சித்திரக்குள்ளர்களாக நடித்துள்ளதாகவும், இந்த சித்திரக்குள்ளர்களின் கேரக்டர்கள் படத்தில் நான்ஸ்டாப் காமெடி கேரக்டர்களாக மட்டுமின்றி படத்தின் திருப்புமுனை கேரக்டர்களாகவும் அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
சிம்புதேவன் இயக்கியிருக்கும் இந்த படத்தை பி.டி.செல்வகுமார் மற்றும் சிபுதமீன்ஸ் ஆகியோர்கள் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளனர். புதிது புதிதாக வரும் 'புலி'யின் செய்திகள் சுவாரஸ்யத்துடன் இருப்பது மட்டுமின்றி படத்தின் எதிர்பார்ப்பையும் பெருமளவு அதிகரித்து வருகிறது. இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வரும் அக்டோபர் 1ஆம் தேதி வெள்ளித்திரைக்கு வருகிறது 'புலி' திரைப்படம்.