'தெறி' இசை வெளியீட்டு விழா குறித்த முக்கிய தகவல்

  • IndiaGlitz, [Monday,March 14 2016]

இளையதளபதி விஜய்யின் 59வது படமும், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் 50வது படமும் ஆன 'தெறி' படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 20ஆம் தேதி நடைபெறும் என அதிகாரபூர்வமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இந்த விழா நடைபெறும் இடம் குறித்த தகவல் இதுவரை அறிவிக்கப்படாத நிலையில் தற்போது இதுகுறித்த தகவல் வெளிவந்துள்ளது.


'தெறி' படத்தின் தெறிக்க வைக்கும் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் காலையில் நடைபெறும் என தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த விழாவுக்கு கோலிவுட்டின் முக்கிய விஐபிக்கள் வருவார்கள் என்றும் இந்த விழா பிரமாண்டமாக நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவில் கலந்துகொள்பவர்கள் குறித்த தகவல் இன்னும் ஒரிரு நாட்களில் வெளிவரும் என தெரிகிறது.


விஜய், சமந்தா, எமிஜாக்சன், பிரபு, ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன், மற்றும் விஜய் மகள் திவ்யா, மீனா மகள் நைனிகா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரமாண்டமாக தயாரித்துள்ளார். அட்லி இயக்கியுள்ள இந்த படம் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சிபிராஜின் 'ஜாக்சன் துரை' டிராக்லிஸ்ட்

சிபிராஜ் நடித்த 'ஜாக்சன் துரை' படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது என்ற அறிவிப்பு ஏற்கனவே வெளீவந்த நிலையில் இந்த படத்தின் டிராக்லிஸ்ட் தற்போது வெளிவந்துள்ளது...

தனுஷ்-கவுதம் மேனன் படத்தின் நாயகி

'கொடி' படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்த தனுஷ் இன்று முதல் தொடங்கியுள்ள 'எனை நோக்கி பாயும் தோட்டா'...

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு மேலும் ஒரு சலுகை

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றதில் இருந்து நலிந்த நடிகர்கள் உள்பட பல்வேறு நடிகர் நடிகைகள் பயன்பெற்று...

மோகன் ராஜாவுடன் மீண்டும் இணைந்த இசையமைப்பாளர்

ஜெயம் சகோதரர்களின் 'தனி ஒருவன்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றிக்கு அழுத்தமான திரைக்கதை...

'தெறி' படத்தின் தெரியாத தகவல்

இளையதளபதி விஜய் பாடிய 'தெறி' படத்தின் ஜித்து ஜில்லாடி பாடலின் நான்கு வரிகளை சமீபத்தில் வெளியிட்டு விஜய் ரசிகர்களை குஷிப்படுத்திய...