தல அஜித்தை வைத்து பைக் ஓட்ட ஆசை... லைலா...
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகையாக கள்ளழகர் படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானவர். பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனம் வென்றவர்.
இவர் கதாநாயகியாக நடித்த தீனா, தில், உன்னை நினைத்து, பார்த்தேன் ரசித்தேன், பிதாமகன் மற்றும் நந்தா போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் ஆகும்.
அஜித், சூர்யா, பிரசாந்த், விக்ரம் போன்ற பெரிய நட்சத்திரங்களோடு கதாநாயகியாக நடித்திருந்தாலும், இவர் இளையதளபதி விஜயோடு நடிக்கவில்லை என்ற கவலை லைலாவின் ரசிகர்களுக்கு ஏக்கமாகவே இருந்தது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வெளிவரவிருக்கும் The GOAT படத்தில் நடிகை லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்துள்ளார்.
இந்தியாக்ளிட்ஸ் நேயர்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டி.....
நடிகர் சூர்யா பார்ப்பதற்குத்தான் வெரி ஸ்ட்ரிக்ட் போல தெரிவார். உள்ளுக்குள் அவர் ரொம்ப நல்லவர். இளகிய மனம் உடையவர். அதே சமயத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் சூர்யா மிகவும் சீரியஸ் ஆனவர். ஷூட்டிங் முடிந்த பின்பு நாங்கள் நக்கல், நையாண்டி என எல்லாம் உண்டு.
சூர்யா பற்றி ஒரு Rumour சொல்லவேண்டும் என்றால், நானும் அவரும் விரைவில் ஒரு படத்தில் நடிக்கிறோம்.
டாப் ஸ்டார் பிரசாந்த் உண்மையில் ஒரு சாக்லேட் பாய். அவரும் நானும் டாம் அன்ட் ஜெர்ரி போல் ஒருவருக்கொருவர் நிறைய கிண்டல் செய்துகொள்வோம். ஷூட்டிங் ஸ்பாட்டிலும் கூட நாங்கள் தமாஷ் செய்து கொண்டுதான் இருப்போம்.
டாப் ஸ்டார் பிரஷாந்த் பற்றி ஒரு Rumor சொல்ல வேண்டும் என்றால், அவர் நடித்து வெளிவந்துள்ள படத்திற்காக 40 கிலோ எடையை குறைத்துள்ளார்.
அடுத்ததாக...
நடன இயக்குனரும், நடிகருமான பிரபுதேவா, அவர் எல்லோரும் நேர்த்தியாக ஆட வேண்டும் என்று விரும்புவார். அவர் இருக்கும் இடத்தில் ஒருவித Vibe இருக்கும்.
அடுத்ததாக...
தல அஜித், அஜித் சார் மேல கோவத்துல இருக்கேன். அவர் ரொம்ப நல்லா சமைப்பார். ஆனால், இதுவரை எனக்கு அவர் சமைச்சு கொடுத்ததில்லை.
அவர் பற்றி ஒரு rumor சொல்லனும்னா, அவரை பின்னாடி உட்காரவைத்து வண்டி ஓட்டவேண்டும் என இந்த பேட்டியில் கல கலப்பாக பேசியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Mithra Anjali
Contact at support@indiaglitz.com
Comments