பேஷன் உலகில் இதுசெம டிரெண்ட்… 60 வயதில் பேஷன் மாடலான தாய்!
Send us your feedback to audioarticles@vaarta.com
டிராவிஸ் டிமீர் எனும் பேஷன் டிசைனர் தனது பேஷன் பொருட்களுக்கு எந்த இளம் மாடலையும் விளம்பர மாடலாக பயன்படுத்த விரும்பாமல் தனது 60 வயது தாயையே மாடலாக மாற்றியிருக்கிறார். இது பேஷன் டிரெண்டில் புது வித்தியாசத்தை உணர வைத்திருக்கிறது.
விளம்பர மாடல்கள் அதுவும் பேஷன் மாடல்கள் என்றால் பதின்ம வயதில் இருக்க வேண்டும் என்பதே பலரின் விருப்பமாக இருந்து வருகிறது. இந்த எண்ணம் உண்மையில் சரிதானா? என்பதை மீண்டும் பரிசோதித்து பார்க்கும் வகையில் டிராவிஸ் டிமீர் என்பவர் தன்னுடைய IEMBE எனும் பிராண்டட் பொருளுக்கு தனது 60 வயது அம்மாவை விளம்பர மாடலாக நியமித்து இருக்கிறார்.
பேஷன் விஷயத்தில் எப்போதும் இளமையை மட்டுமே விரும்பும் நமது நெட்டிசன்கள் டிராவிஸ் மற்றும் அவரது அம்மாவின் கூட்டணி வீடியோவை பார்த்து தற்போது சோஷியல் மீடியாவில் மெய்சிலிர்த்து வருகின்றனர். மேலும் நியான் பச்சை நிறத்தில் உடையணிந்துள்ள டிராவிஸின் அம்மா ஒரு உண்மையான மாடலை மிஞ்சும் அளவிற்கு வளைந்து வளைந்து வந்து அழகான புன்னகை மற்றும் விளையாட்டுத் தனத்தால் தனது உடை அலங்காரத்தை வெளிப்படுத்துகிறார்.
இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் பேஷனுக்கு வயதான மனநிலை எதற்கு? என்பதுபோல இருக்கிறது இவர்களது புகைப்படம்.
And she understood the assignment ?? https://t.co/RKcSIQKZ6K pic.twitter.com/dDmjY3s1Xf
— Travisdimeer (@travisdimeer) December 17, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments