அவதூறாக பேசிய வழக்கில் கைது.....! மீரா மிதுன் மீது குண்டர் சட்டம் பாய்கிறது....!
Send us your feedback to audioarticles@vaarta.com
பட்டியிலினத்தவரை அவதூறாக பேசிய வழக்கில், கைதான நடிகை மீரா மிதுன் மீது குண்டார்ஸ் சட்டம் பாய்ந்துள்ளதால், காவல் துறையினர் அச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.
பிரபலமானது எப்படி....!
நான் தான் தமிழகத்திலே சிறந்த சூப்பர் மாடல் என பெருமையடித்தும் கொள்ளும் மீரா மிதுன் என்கிற தமிழ்செல்வி, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் சர்ச்சைகளில் சிக்கி பிரபலமானார். கடந்த 2016-இல் இவருக்கு கொடுக்கப்பட்டிருந்த "மிஸ் தென் இந்தியா" பட்டம் பறிக்கப்பட்டது என்பது பெரும்பாலானோருக்கு தெரிந்த ஒன்றே. பிரபலமாவதற்காக முன்னணி நடிகர்களின் மனைவி குறித்து அவதூறாக பேசி இணையவாசிகளிடம் வாங்கிக்கட்டிக்கொண்டார். இதனால் திரைத்துறை பிரபலங்கள், ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் மீராவிற்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் இயக்குனர்கள் மற்றும் பிற நடிகைகள் குறித்து தவறாகவும், இழிவாகவும் பேசி வந்தார்.
சாதி அவதூறு பேச்சு.....!
இந்தநிலையில் அண்மையில் "குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் தன் முகத்தை காப்பி அடித்து பயன்படுத்துவதாகவும், அவர்களை சினிமாவை விட்டே துரத்த வேண்டும்" என்றும் குற்றம் சாட்டிய மீரா, சாதி குறித்து இழிவாக பேசி வீடியோ ஒன்றை யுடியூப் தளத்தில் வெளியிட்டு இருந்தாள். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக, சமூக ஆர்வலர்கள், நெட்டிசன்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொது செயலாளர் வன்னிஅரசு, சென்னையில் உள்ள வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் மீரா மீது "எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்" என புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில் பட்டியலின மக்களை அவதூறாக பேசிய குற்றத்திற்காக மீராமீதுன் மீது, போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு, நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியிருந்தனர்.
ஆனால் ஆஜராகாமல், இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அட்ராசிட்டி செய்த மீரா "போலீஸ்-ஆல் என்னிடம் நெருங்க முடியாது, முடிஞ்சா என்ன கைது பண்ணுங்க" என பேசி சவால் விட்டிருந்தார். இதன்பின் தனது ஆண் நண்பருடன் கேரளாவில் தலைமறைவானார். அங்குள்ள ஆழப்புழா விடுதியில் பதுங்கியிருந்த மீராவை, கடந்த 14-ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, சென்னை அழைத்து வந்தனர்.
வீடியோவில் தகாத பேச்சு.....!
கெத்தாக பேசிய மீராவை, போலீசார் கைது செய்ய சென்றதால், தன்னை காவல் துறையினர் கொடுமை படுத்துவதாக வீடியோ ஒன்றை கைதுக்கு முன் வெளியிட்டாள். இதன் பின் சென்னை வரும்வரை காவல்துறையினரை ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. வேப்பேரி காவல் நிலையத்தில் வைத்து அவரை விசாரித்ததில், மீரா போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று மாலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீராவை, வரும் 27-ஆம் தேதி புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
ஜெயலில் கம்பி எண்ணும் மீராவுக்கு துணை சேரும் வகையில், அவரது ஆண் நண்பர் சாம் அபிஷேக்-கையும் நேற்று கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். மீரா மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவர் மீது குண்டார்ஸ் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments