அந்த அறிவு கூட இல்லையா அந்த ஆளுக்கு? துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று நடைபெற்ற அம்பேத்கர் புத்தக விழாவில் மன்னராட்சி குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் அர்ஜுனா பேசியதற்கு, "அந்த அறிவு கூட இல்லையா அந்த ஆளுக்கு?" என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற "எல்லோருக்கும்ான தலைவர் அம்பேத்கர்" என்ற புத்தக வெளியீட்டு விழாவில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா, "2026 ஆம் ஆண்டு தேர்தலில் மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும். தமிழகத்தில் மன்னர் ஆட்சி நடைபெற்று வருகிறது. பிறப்பால் அனைவரும் சமம் என்ற கருத்துகளை அம்பேத்கர் உருவாக்கியது போல, இனி ஒருவர் பிறப்பால் முதலமைச்சராக கூடாது. இனி தமிழகத்தை ஆள வேண்டும் என்றால், ஒரு கருத்தியல் தலைவர் தான் வேண்டும்," என்று பேசினார்.
ஆதவ் அர்ஜுனாவின் இந்த பேச்சு குறித்து, உதயநிதி ஸ்டாலின், "யார் இங்கே பிறப்பால் முதல்வரானது? மக்கள் தேர்ந்தெடுத்து தான் முதல்வரானார். அந்த அறிவு கூட இல்லை அவருக்கு? தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சி தான் நடைபெறுகிறது," என்று பதிலளித்தார்.
மேலும், விஜய் விமர்சனம் குறித்து செய்தியாளர்களிடம், "சினிமா செய்திகளை நான் பார்ப்பதில்லை," என்று பதிலளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments