'புஷ்பா 2' ரிலீஸ் தள்ளி வைக்க துணை முதல்வர் காரணமா? அதிர்ச்சி தகவல்..!

  • IndiaGlitz, [Thursday,June 20 2024]

அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா 2’ திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென இந்த படம் டிசம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என்று ரிலீஸ் செய்தி தள்ளி வைக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளத்தில் ஒரு ரசிகர் படக்குழுவினரை மிரட்டி நீதிமன்றம் செல்வேன் என்று சொல்லும் அளவுக்கு ரசிகர்கள் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பால் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில் ’புஷ்பா 2’ ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டதற்கு கிராபிக்ஸ் பணிகள் முடியாததே காரணம் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது துணை முதல்வர் தான் காரணம் என்று கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

’புஷ்பா 2’ படத்தின் வில்லன் கேரக்டர் துணை முதல்வர் என்று இருப்பதாகவும் ஆனால் தற்போது ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நடிகர் பவன் கல்யாண் துணை முதல்வராக பதவி ஏற்றி இருக்கும் நிலையில் துணை முதல்வர் என்ற கேரக்டரை மாற்ற முடிவு செய்திருப்பதாகவும் இதனால் தான் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலின் போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கு அல்லு அர்ஜுன் பிரச்சாரம் செய்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது பவன் கல்யாண் துணை முதல்வராக பதவியேற்று இருக்கும் நிலையில் அல்லு அர்ஜுன் படத்தின் வில்லன் துணை முதல்வர் என்றால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால் தான் இந்த கேரக்டர் மாற்றப்படுவதாக கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை படம் வெளிவந்த பின்னர் தான் தெரிய வரும்.

 

More News

கள்ளச்சாராய மரணத்திற்கு யார் காரணம்? யார் பொறுப்பேற்பது? சரத்குமாரின் அடுக்கடுக்கான கேள்விகள்..!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் இந்த சம்பவத்திற்கு நடிகர் சரத்குமார் வருத்தம் தெரிவித்து

தமிழக அரசின் அலட்சிய போக்கே காரணம்.. கள்ளக்குறிச்சி மரணங்கள் குறித்து பா ரஞ்சித்..!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 30 பேர்கள் வரை பலியான சம்பவத்திற்கு ஏற்கனவே தளபதி விஜய் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது இயக்குனர் பா ரஞ்சித் தமிழக அரசுக்கு கண்டனம்

நடிகர் விமல் அடுத்த படத்தில் பிக்பாஸ் தமிழ் சீசன் 6 இரண்டு நடிகைகள்.. வைரல் புகைப்படம்..!

விமல் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இரண்டு போட்டியாளர்கள் நடிக்க உள்ள நிலையில் இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தீபிகா படுகோன் பேபி பம்ப் போட்டோஷூட்.. குவியும் திரையுலக பிரபலங்களின் ரியாக்சன்..!

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தீபிகா படுகோன் சமீபத்தில் கர்ப்பமான நிலையில் அவர் முதல்முறையாக பேபி பம்ப் போட்டோஷூட்  புகைப்படங்களை தனது

ரூ.100 கோடி வசூல் படம் உட்பட எத்தனை படங்கள்? இந்த வார ஓடிடி ரிலீஸ் தகவல்கள்..!

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வரும் நிலையில் ஏற்கனவே ரிலீஸ் ஆன திரைப்படங்கள் ஒரே மாதத்தில் ஓடிடி பிளாட்பாரத்தி