இந்தியக் கிரிக்கெட் அணியைப் பார்த்தால் பயமாக இருக்கிறது… கிரிக்கெட் ஜாம்பவானின் நெகிழ்ச்சி கருத்து!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி அபாரமான வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்த வெற்றியை ஆஸ்திரேலிய வீரர்களே அதிர்ச்சியாகப் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் ஜாம்பவான், 360 டிகிரி வீரர் எனச் செல்லமாக அழைக்கப்படும் ஏ.பி.டிவில்லியர்ஸ் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக வெற்றிப் பெற்று இருக்கும் இந்திய அணியை நெகிழ்ச்சி பொங்க பாராட்டி இருக்கிறார்.
இந்திய அணியின் வெற்றிக் குறித்து ஏ.பி.டிவில்லியர்ஸ் தனது டிவிட்டர் பதிவில், “என்ன மாதிரியான டெஸ்ட் மேட்ச்! இந்திய அணியின் பலம் பயமுறுத்துகிறது. ரிஷப் பந்த் 17, ஸ்வீட் நம்பர் 17, வெல் பிளேய்ட் யங் மேன், டெஸ்ட் கிரிக்கெட் அதன் உச்சபட்ச சிறப்பில் அமைந்தது‘’ எனப் பதிவிட்டு உள்ளார். இந்தப் பதிவிற்கு கிரிக்கெட் ரசிகர்கள் லைக்குளை அள்ளி வீசியதோடு டிவிட்டர் பதிவை வைரலாக்கி வருகின்றனர்.
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதில் ரிஷப் பந்த் 89 ரன்களைக் குவித்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஷீப்மன் கில் 91 ரன்களும் புஜாரா 56 ரன்களை எடுத்தும் கடையில் வாஷிங்கடன் சுந்தர் ஒரு சிக்ஸ் மற்றும் 2 பவுண்டரிகளை வீசி அணியின் வெற்றியை சாதகமாக்கினர்.
இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பந்து வீசிய தமிழக வீரர் நடராஜன் 3 விக்கெட்டுகளை வீசி ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஆஸ்திரேலிய அணியின் ரன்களை கட்டுப்படுத்தினார். அடுத்து ஷர்துல் தாக்கூர், சிராஜ்மும் அபாரமான பந்துகளை வீசினார். இதனால் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் 33 ஆண்டுகால சாதனையை முறியடித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியை இந்திய ரசிகர்கள் மட்டும் இன்றி பல கிரிக்கெட் ஜாம்பவான்களும் கொண்டாடி வருகின்றனர்.
What a Test match! The depth of Indian Cricket is scary. @RishabhPant17 , sweet number 17. Well played young man. #testcricket at its very best
— AB de Villiers (@ABdeVilliers17) January 19, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments