close
Choose your channels

'லியோ' படத்தில் நான் இணைந்தது இப்படித்தான் : கிறிஸ்டோபர் நோலன் பட நடிகர் தகவல்..!

Thursday, September 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘டெனண்ட்’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் டென்சில் ஸ்மித், ’லியோ’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பதாக தகவல் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’லியோ’ படத்தில் நடித்தது உண்மைதான் என்று அவர் கூறியுள்ளார். அவர் இது குறித்து மேலும் கூறியதாவது:

’லியோ’ படம் எனது முதல் தமிழ் படம். நான் மூன்று நாட்கள் ’லியோ’ படப்பிடிப்பில் இருந்தேன். தளபதி விஜய் ஒரு அற்புதமான மனிதர். நான் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘டெனண்ட்’ படத்தில் நடித்ததை அறிந்ததும் அவர் 'அற்புதம் சார்’ என்று என்னை வாழ்த்தினார். அவருடைய அர்ப்பணிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. நான் நடித்த அனைத்து காட்சிகளும் விஜய்யுடன் இருந்ததால் எனக்கு இது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது.

ஆரம்பத்திலிருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜை நான் கவனித்த போது ஒவ்வொரு ஷாட்டுக்கும் அவர் தெளிவான பார்வையுடன் இருந்ததை கவனித்தேன். ஒரு நிமிடம் கூட அவரிடம் எந்த விதமான குழப்பமும் இல்லை. அவர் ஒரு அற்புதமான இயக்குனர். ’லியோ’ படத்தை பற்றி ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் அற்புதம்.

இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது குறித்து என்னுடைய மேனேஜர் தான் என்னிடம் கூறினார். விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் படம், நீங்கள் நடிக்கிறீர்களா? என்று கேட்டபோது நான் உடனே சரி என்று கூறி விட்டேன்’ என்று இந்த படத்தில் இணைந்ததை டென்சில் ஸ்மித் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment