கீரிகள் மூலம் மனிதர்களுக்கு கொரோனா பரவுகிறதா??? தடுப்பூசி கண்டுபிடிப்பில் அடுத்த சிக்கல்!!!

  • IndiaGlitz, [Monday,November 09 2020]

 

முன்னதாக மனிதர்களைத் தவிர சில விலங்குகளுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தி இருந்தனர். ஆனால் கொரோனா வைரஸால் மனிதர்களின் உடல் உறுப்புகளில் பாதிப்பு ஏப்டுவதைப் போல விலங்குகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பதையும் விஞ்ஞானிகள் தெளிவுப்படுத்தி இருந்தனர். ஆனால் தற்போது உலகிலேயே முதல் முறையாக டென்மார்க்கில் கொரோனா வைரஸ் கீரிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய சம்பவம் நிகழ்ந்து இருக்கிறது. இது கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.

டென்மார்க்கில் உணவுத் தேவைக்காக மினிக் எனப்படும் ஒருவகை கீரிகள் அந்நாட்டின் பல்வேறு பண்ணைகளில் வைத்து வளர்க்கப்பட்டு வருகின்றன. அப்படி வளர்க்கப்படும் கீரி இறைச்சி சீனா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. இந்நிலையில் அந்நாட்டின் கீரிகள் வளர்க்கப்படும் ஒரு பண்ணையில் வேலைப் பார்த்த 213 ஊழியர்களுக்கு திடீரென கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் ஊழியர்களுக்கு ஏற்பட்ட கொரோனா நோய்த்தொற்று பரவலை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அதிர்ச்சி ஏற்படுத்தும் தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளனர்.

அதில் மினிக் வகையின கீரிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கீரிகள் மனிதர்களுக்கும் நோய்த்தொற்றை ஏற்படுத்துவதும் தெரியவந்துள்ளது. இதற்குமுன் புலி, நாய், சிங்கம், பூனை போன்ற விலங்குகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தாலும் அந்த விலங்குகள் மனிதர்களுக்க நோய்த்தொற்றை ஏற்படுத்தவில்லை. ஆனால் இந்த முறை கீரிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதுமேலும் மனிதர்களுக்கு நோய்த்தொற்றை பரப்பி வருகிறது.

இதனால் அதிர்ந்து போன டென்மார்க் அரசாங்கம் அந்நாட்டில் செயல்பட்டு வரும் 213 கிரீ வளர்க்கும் பண்ணைகளில் உள்ள 1 கோடியே 7 லட்சம் கீரிகளை கொன்றுவிடுமாறு உத்தரவிட்டு இருக்கிறது. மேலும் கொரோனா பரவலைத் தடுக்க இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளை எடுக்க தயாராக இருப்பதாகவும் அந்நாட்டு அரசாங்கம் உறுதி அளித்து உள்ளது. கடந்த ஜனவரியில் ஆரம்பித்த கொரோனா நோய்த்தொற்றுக்கு 10 மாதங்களைக் கடந்த பின்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட வில்லை. இந்நிலையில் விலங்குகள் மனிதர்களுக்கு நோய்த்தொற்றை பரப்புவது மேலும் தடுப்பூசி கண்டுபிடிப்பில் சிக்கலை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

More News

விஷ்ணு விஷால் தந்தை மீதான வழக்கு: சூரியின் திடீர் கோரிக்கை!

நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை சூரியிடம் ரூபாய் 2.70 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்த நிலையில் தற்போது திடீரென சூரியின் தரப்பில் கோரிக்கை ஒன்று

நீச்சல் குளத்தில் கவர்ச்சி போஸ்: 'பிக்பாஸ் தமிழ்' நடிகையின் புகைப்படங்கள் வைரல்!

பிக்பாஸ் தமிழ் சீசன் 1 போட்டியாளர்களில் ஒருவரும் தமிழ் திரைப்பட நடிகையுமான ரைசா வில்சன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நீச்சல்குள பிகினி புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது 

ரசிகர்களுக்கு தனுஷ் தரும் தீபாவளி விருந்து!

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகிய 'ஜகமே தந்திரம்' என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே ரிலீசுக்கு தயாராகி விட்டது என்பதும்,

ஒரே ஒரு நபருக்கு கடிதம்: சோகமயமான பிக்பாஸ் வீடு

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் இதுவரை 3 போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர் என்பதும் இரண்டு போட்டியாளர்கள் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வந்துள்ளனர்

யோகிபாபு-அஞ்சலி படத்தின் டைட்டில் அறிவிப்பு!

சந்தானம் நடித்த 'டிக்கிலோனா'படத்தை தயாரித்த கேஎஸ் சினிஷ் தயாரிக்கும் அடுத்த படத்தில் முக்கிய வேடங்களில் யோகி பாபு மற்றும் அஞ்சலி நடிக்க உள்ளனர் என்ற செய்தி வெளியானதை நேற்றே பார்த்தோம்