டீ போட்டு கொடுக்காத மனைவியை கத்தரிகோலால் குத்தி கொன்ற கணவன்
Send us your feedback to audioarticles@vaarta.com
அழகாக இல்லாததால் கணவரின் தலையில் கிரைண்டர் கல்லை தூக்கி போட்டு கொலை செய்த மனைவி குறித்த செய்தியை நேற்று பார்த்தோம். இந்நிலையில் டீ போட்டு கொடுக்க மறுத்த மனைவியை கத்தரிக்கோலால் குத்தி செய்த கணவன் குறித்த அதிர்ச்சி செய்தி ஒன்று இன்று வெளியாகியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் கோட்வார் என்ற பகுதி அருகே உள்ள கஷிராம்பூர் என்ற் கிராமத்தைச் சேர்ந்தவர் 38 வயது சங்கீத் சிங். இவருக்கும் ஆர்த்தி என்பவருக்கும் 13 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 11 வயதில் மகனும், 9 வயதில் மகளும் உள்ளனர். கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்பட்டு கொண்டிருந்ததாகவும் கணவர் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக ஆர்த்தி காவல்நிலையத்தில் செய்த புகார் ஒன்று நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் காலையில் தூங்கி எழுந்த சங்கீத்சிங் மனைவி ஆர்த்தியிடம் டீ போட்டு கொடுக்குமாறு கூறியுள்ளார். ஆனால் அதற்கு ஆர்த்தி மறுக்கவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் திடீரென சங்கீத், டேபிளில் இருந்த கத்திரிகோலை எடுத்து, தனது மனைவியை சரமாரியாக குத்தி கொலை செய்தார். ஆர்த்தியின் கூச்சல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து சங்கீத்தை பிடித்து காவல்துறையினர்களிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் சங்கீத் சிங்கை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கணவன் மனைவி இடையே சரியான புரிந்து கொள்தல் இல்லாதது, பொறுமை இல்லாததது, ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி கருத்துக்களை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது ஆகியவை காரணமாகவே இதுபோன்ற துர்ப்பாக்கிய சம்பவங்கள் நடந்து வருவதாக சமூக நல ஆர்வலர்கள் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com