தென்மாவட்டங்களில் அடியெடுத்து வைக்கும் டெங்கு காய்ச்சல்.....! மக்களே உஷார்....!

  • IndiaGlitz, [Friday,July 09 2021]

டெங்கு தொற்றானது தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிகம் பரவ துவங்கியுள்ளது. கடந்த ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை சுமார் 2090 நபர்களுக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்ற ஜூன் மாதத்தில் 82 பேருக்கு டெங்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுவும் குறிப்பாக தென் மாவட்டங்களில் டெங்கு அதிகமாக பரவிவருகிறது.

கடந்த 6 மாதங்களில் ஏற்பட்ட பாதிப்பு நிலவரத்தை இதில் பார்க்கலாம்.

தேனி -282
மதுரை -267
தென்காசி -260
நெல்லை -193
கோவை-175
சென்னை -60
தமிழ்நாடு -2090

தமிழகத்தில் கடந்த ஆண்டு 2410 நபர்களுக்கு மட்டும்தான் டெங்கு பாதிப்பு இருந்தது. ஆனால் நடப்பாண்டில் கடந்த ஆறு மாதங்களிலே 2090 நபர்களுக்கு டெங்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வழக்கமாக பதிவாகி இருக்கும் எண்ணிக்கையில் தான் பாதிப்புகள் பதிவாகி இருப்பதாக, சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

காய்ச்சல், உடல் வலி, சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் கொரோனாவிற்கும், டெங்கு காய்ச்சலுக்கும் இருப்பதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக உடல்நலக்குறைப்பாடுகள் ஏற்பட்டால் பரிசோதித்துக் கொள்வது நல்லது என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். டெங்கு தொற்று ஏற்பட்டவர்களுக்கு நெற்றிப்பகுதி, கண்களுக்கு பின்னால் வலி இருக்கும், ஈறுகளில் ரத்தம் கசியும், தட்டனுக்களின் எண்ணிக்கை குறையும் எனக் கூறப்படுகிறது.
 

More News

சச்சின் பேட்டிங் செய்து பார்த்திருப்பீர்கள், குக்கிங் செய்து பார்த்ததுண்டா?

இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று ரசிகர்களால் போற்றப்படுபவர் சச்சின் டெண்டுல்கர் என்பதும் பல பந்துவீச்சாளர்களை இவர் தனது காலத்தில் துவம்சம் செய்து இருக்கிறார் என்பது தெரிந்ததே

Google Chromeஇல் பிரைவசி பிரச்சனையா? இணையவாசிகளை பதற வைக்கும் தகவல்!

இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுக்கவே Chrome ஒரு சிறந்த பிரவுசராக அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது

கமல்ஹாசனின் 'விக்ரம்' ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள 'விக்ரம்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது 

புதிய அவதாரம் எடுத்த பிக்பாஸ்....! இதில் வெளியானத்திற்குப்பின் தான் டிவியில்....?

பல மொழிகளில் வெளிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது, முதன்முதலாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக செய்திகள் கூறுகிறது.

அதிமுக-வின் அதிகார மமதைதான், கர்நாடக அரசின் ஆதிக்கத்திற்கு காரணம்...!தமிழகஅரசிற்கு சீமான் வேண்டுகோள்....!

தென்பெண்ணையாற்றின் குறுக்கே பிரம்மாண்ட அணையை கர்நாடக அரசு கட்டியுள்ளது. அந்த அரசு மீது தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்காமல் அமைதி காப்பது ஏன்...?