தென்மாவட்டங்களில் அடியெடுத்து வைக்கும் டெங்கு காய்ச்சல்.....! மக்களே உஷார்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
டெங்கு தொற்றானது தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிகம் பரவ துவங்கியுள்ளது. கடந்த ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை சுமார் 2090 நபர்களுக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்ற ஜூன் மாதத்தில் 82 பேருக்கு டெங்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுவும் குறிப்பாக தென் மாவட்டங்களில் டெங்கு அதிகமாக பரவிவருகிறது.
கடந்த 6 மாதங்களில் ஏற்பட்ட பாதிப்பு நிலவரத்தை இதில் பார்க்கலாம்.
தேனி -282
மதுரை -267
தென்காசி -260
நெல்லை -193
கோவை-175
சென்னை -60
தமிழ்நாடு -2090
தமிழகத்தில் கடந்த ஆண்டு 2410 நபர்களுக்கு மட்டும்தான் டெங்கு பாதிப்பு இருந்தது. ஆனால் நடப்பாண்டில் கடந்த ஆறு மாதங்களிலே 2090 நபர்களுக்கு டெங்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வழக்கமாக பதிவாகி இருக்கும் எண்ணிக்கையில் தான் பாதிப்புகள் பதிவாகி இருப்பதாக, சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
காய்ச்சல், உடல் வலி, சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் கொரோனாவிற்கும், டெங்கு காய்ச்சலுக்கும் இருப்பதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக உடல்நலக்குறைப்பாடுகள் ஏற்பட்டால் பரிசோதித்துக் கொள்வது நல்லது என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். டெங்கு தொற்று ஏற்பட்டவர்களுக்கு நெற்றிப்பகுதி, கண்களுக்கு பின்னால் வலி இருக்கும், ஈறுகளில் ரத்தம் கசியும், தட்டனுக்களின் எண்ணிக்கை குறையும் எனக் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com
Comments