'டிமாண்ட்டி காலனி 2' படத்தின் வசூல் இத்தனை கோடியா? பட்ஜெட்டை விட இருமடங்கு வசூலா?
Send us your feedback to audioarticles@vaarta.com
அருள்நிதி நடித்த ’டிமாண்ட்டி காலனி 2’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டு வார வசூல் குறித்த தகவல் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான ’டிமாண்ட்டி காலனி ’படத்தின் இரண்டாம் பாகம் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விருந்தாக வெளியானது.
இந்த படத்தில் முதல் காட்சி முடிந்தவுடன் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்த நிலையில் இந்த படம் தற்போது இரண்டு வாரங்களில் 55 கோடி ரூபாய் வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை புதிய போஸ்டர் உடன் அருள்நிதி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 30 கோடி ரூபாய் என்று கூறப்பட்ட நிலையில் பட்ஜெட்டை விட கிட்டத்தட்ட இரு மடங்கு வசூல் செய்திருப்பதை அடுத்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
55+ Crore and counting! 🎉 #Demontecolony2 is taking the box office by storm ⚡️🔥🔥@BTGUniversal @RedGiantMovies_ @bbobby @ManojBeno @AjayGnanamuthu @priya_Bshankar @SamCSmusic @proyuvraaj @thinkmusicindia pic.twitter.com/ZeEvUtWbk4
— Arulnithi tamilarasu (@arulnithitamil) August 29, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments