டைட்டில் வின்னர் பட்டம் அறிவித்த சில நிமிடங்களில் அர்ச்சனா போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

  • IndiaGlitz, [Monday,January 15 2024]

பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா என அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் அவர் நடித்து வரும் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த 100 நாட்களுக்கு மேல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. வைல்ட் கார்டு போட்டியாளராக வந்த அர்ச்சனா டைட்டில் வின்னர் என்று அறிவிக்கப்பட்டு அவருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு தொகை அளிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் பிக் பாஸ் அர்ச்சனா நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ’டிமான்டி காலனி 2’. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் அர்ச்சனா இந்த படத்தில் ஒரு சிறு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்

பிக்பாஸ் டைட்டில் வின்னர் என அர்ச்சனா அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் ’டிமான்டி காலனி 2’ படக்குழுவினர் அர்ச்சனாவுக்கு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் சாம் சிஎஸ் இசையில், ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவில், குமரேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. இந்த படம் முதல் பாகம் போலவே வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.