அமைச்சர் உதயநிதியிடம் நிவாரண நிதி கொடுத்த 'டிமாண்டி காலனி 2' படக்குழு.. எத்தனை லட்சம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழை மற்றும் பெரும் வெள்ளத்தால் பெரும் சேதம் ஏற்பட்ட நிலையில் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக திரை உலகினர் தாராளமாக நிதியளித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.
சூர்யா, கார்த்தி, விஷ்ணு விஷால், சூரி, சிவகார்த்திகேயன், வடிவேலு உள்ளிட்டோர் சமீபத்தில் அமைச்சர் உதயநிதியை சந்தித்து நிவாரண நிதி அளித்தனர் என்பதை பார்த்தோம். அதேபோல் இயக்குனர் அமீர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து நிவாரண நிதி அளித்தார்
இந்த நிலையில் ’டிமான்டி காலனி 2’ படத்தின் குழுவினர் அமைச்சர் உதயநிதியை சந்தித்து ரூ.15 லட்சம் நிதி அளித்துள்ளனர். இது குறித்து அமைச்சர் உதயநிதி தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் உருவான பாதிப்புகளை துடைத்தெறியும் பணியில் கழக அரசு மும்முரமாக செயல்பட்டு வருகிறது. கழக அரசின் இப்பணிகளுக்கு பலரும் பங்களிப்பும் செய்து வருகின்றனர். அந்தப் பணிகளுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், 'டிமான்டி காலனி 2' திரைப்படக்குழுவின் சார்பில் அப்படத்தின் கதாநாயகனான தம்பி அருள்நிதி, தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன், இயக்குநர் அஜய்ஞானமுத்து ஆகியோர் இணைந்து ரூ.15 லட்சத்திற்கான காசோலையை 'முதலமைச்சரின் பொது நிவாரண நிதி'-க்கு இன்று நம்மிடம் வழங்கினர். அவர்களுக்கு என் அன்பும் நன்றியும்.
மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் உருவான பாதிப்புகளை துடைத்தெறியும் பணியில் கழக அரசு மும்முரமாக
— Udhay (@Udhaystalin) December 17, 2023
செயல்பட்டு வருகிறது. கழக அரசின் இப்பணிகளுக்கு பலரும் பங்களிப்பும் செய்து வருகின்றனர்.
அந்தப் பணிகளுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், 'டிமான்டி காலனி 2' திரைப்படக்குழுவின் சார்பில்… pic.twitter.com/jhGa4kMC22
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout