ஓடிடியில் திரையரங்குகளில் வெற்றி பெற்ற, 'டிமான்ட்டி காலனி 2'. எந்த ஓடிடி? என்ன தேதி?
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட தமிழ் திகில் ஹாரர் கிளாசிக் இரண்டாம் பாகமான ‘டிமான்ட்டி காலனி 2’ திரைப்படம், வரும் செப்டம்பர் 27 அன்று வெற்றிகரமாக ZEE5 இல் பிரத்தியேகமாக தொடர்ந்து ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.
பி.டி.ஜி யுனிவர்சல், ஞானமுத்து பட்டறை மற்றும் ஒயிட் நைட்ஸ் என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் கீழ், பாபி பாலச்சந்திரன் தயாரிப்பில், ஆர். அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்த திரைப்படம் ‘டிமான்ட்டி காலனி 2’.
இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் பிளாட்ஃபார்ம் மற்றும் பன்மொழி கதைசொல்லியாக, ZEE5 தென்னிந்தியாவில் உள்ள பார்வையாளர்களைக் கவரும் வகையில், தொடர்ச்சியாக பல அற்புதமான படைப்புகளை வழங்கி வருகிறது. சமீபத்திய வெளியீடுகளான 'ரகுதாத்தா', 'நுனக்குழி' உள்ளிட்ட அசத்தலான படைப்புகளை அடுத்து, இந்த ஆண்டின் அதி பயங்கரமான ஹாரர் பிளாக்பஸ்டர் "டிமான்ட்டி காலனி 2" படத்தினை ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.
வரும் செப்டம்பர் 27 முதல் ZEE5 இல் "டிமான்ட்டி காலனி 2" படத்தைக் கண்டுகளிக்கலாம். சஸ்பென்ஸ் மாஸ்டர் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இந்த படம், ஏற்கனவே திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களை மிரட்டிய நிலையில், தற்போது டிஜிட்டலில் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது.
அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிப்பில், மிக மாறுபட்ட திரைக்கதையில், பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் நிறுத்திய, 'டிமான்ட்டி காலனி 2', ஒரு பயங்கரமான தலைசிறந்த ஹாரர் படைப்பாகக் கொண்டாடப்பட்டது.
இப்படம் திரையரங்குகளில் 55 கோடிக்கு மேல் வசூலித்து, தமிழ் சினிமா வரலாற்றில் பிளாக்பஸ்டர் வெற்றி படங்களின் வரிசையில் இடம்பெற்றது. செப்டம்பர் 27 முதல் ZEE5 இல் மட்டும், லார்ட் டிமான்டேவின் வருகையைக் கண்டுகளிக்க தயாராகுங்கள்!
ZEE5 இன் தலைமை வணிக அதிகாரி மணீஷ் கல்ரா கூறுகையில், 'டிமான்ட்டி காலனி 2' படத்தினை எங்கள் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், குறிப்பாக ZEE5 இல் தமிழ் மற்றும் தென்னிந்திய உள்ளடக்கத்திற்கான தேவை அதிகரித்து வருகிறது. இந்த திரைப்படம் முந்தைய படத்தின் பாரம்பரியத்தைத் தொடர்வதோடு, முதல் படத்தினை விடவும் ஒரு மிரட்டலான ஹாரர் அனுபவத்தை வழங்குகிறது. இப்படத்தை வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.
டிமான்ட்டி காலனி 2 படத்தின் இயக்குநர் ஆர். அஜய் ஞானமுத்து கூறுகையில், திரையரங்குகளில் பெற்ற மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், இப்போது ZEE5 இல் பெரிய அளவிலான பார்வையாளர்களே சென்றடைவது மகிழ்ச்சியளிக்கிறது. ZEE5 மூலம் உலகளாவிய பார்வையாளர்களுக்கு இந்த அனுபவத்தை விரிவுபடுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், பல்வேறு பகுதிகளில் உள்ள ரசிகர்களைச் சென்றடைய ZEE5 நம்பமுடியாத தளத்தை வழங்குகிறது. இந்த பரந்த ரீச் எங்கள் படத்தை, இன்னும் கூடுதலான திகில் ஆர்வலர்களுக்கு கொண்டு சேர்க்கும், மேலும் அனைவரும் தங்கள் வீடுகளில் அமர்ந்து, இந்த அட்டகாசமான அனுபவத்தை பெறலாம். ரசிகர்களின் வரவேற்பை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.
டிமான்ட்டி காலனி 2 படத்தின் முன்னணி நடிகர் அருள்நிதி கூறுகையில், “டிமான்ட்டி காலனி 2 படத்தில், இரட்டை வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது, முதல் படத்திலிருந்த ஸ்ரீனியின் கதாபாத்திரம் இந்த பாகத்திலும் தொடர்கிறது. மேலும் ஸ்டைலிஷான மற்றும் அலட்சியமாக இருக்கும் ரகு எனும் இன்னொரு பாத்திரத்தில் நடித்தது, மகிழ்ச்சி. இந்த இரண்டு வித்தியாசமான பாத்திரங்களில் நடித்தது, மிக சவாலாக இருந்தது. திரையரங்குகளில் எங்களுக்குக் கிடைத்த பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ், மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. ZEE5 மூலம் இந்தக் கதாபாத்திரங்களின் ஆழத்தையும் மாறுபாட்டையும் பரந்த பார்வையாளர்கள் அனுபவிப்பதை காண ஆவலோடு காத்திருக்கிறேன்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com